திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி வெள்ளியன்று வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை துவக்கினார். இதனை திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து உரையாற்றினார்.
கோவை, ஏப். 26- அனைத்து தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தெரிவித்தார்.கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா சூலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்றது. இந்த அலுவலகத்தை சூலூர் இடைத்தேர்தல் திமுக பொறுப்பாளர் ஏ.வ.வேலு ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி, சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.இராமசந்திரன், சிபிஎம்மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி, யு.கே.சிவஞானம், சூலூர் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம் மற்றும் திமுக இளைஞரணி துணைசெயலாளர் பைந்தமிழ்பாரி, மாவட்ட செயலாளர்கள் சிவலிங்கம், திருப்பூர் செல்வராஜ் மற்றும் வீரபாண்டி ராஜா, முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், காங்கிரஸ் புறநகர் மாவட்ட தலைவர் விஎம்சி.மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், 4 தொகுதியில் நடைபெறும் இந்த இடைதேர்தல் மிகவும் முக்கியமான கால கட்டத்தில் நடைபெறுகிறது. தற்போது 3 எம்.எல்.ஏகளுக்கு தடை விதிக்க கோரி அதிமுக கொறடா சபாநாயகருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 18 இடங்களிலும் திமுக அணி வெற்றி பெறும் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதனால் அதிமுகஆட்சி கவிழ்வது நிச்சயம். ஆகையால், ஆளுங்கட்சியில் உள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் விசைத்தறிகள் பல்வேறு பிரச்சனைகளால் அழிந்து வருகிறது. அதனை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை முதல்வர் துவக்கி உள்ளது ஒரு பொய்யான வாக்குறுதி. உண்மையில் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அத்திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்படும். மேலும், விவசாய நிலங்களில் உயிர்மின் கோபுரம் அமைப்பதை ரத்து செய்து விட்டு கேரள மாநிலம் போல புதைவடமாக மின்சாரத்தை எடுத்து செல்ல நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும், விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பிரச்சனையில் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும், சூலூர் எம்எல்ஏ கனகராஜ் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக வாட்ஸ் அப் வீடியோ பரவி வருகிறது. இதனை தானும் அறிந்ததாகவும், இயற்கை மரணம் இல்லை அது செயற்கை மரணம் போன்ற சந்தேகம் எழுவதாகவும், நான் வெற்றி பெற்றால் முன்னாள் எம்எல்ஏ கனகராஜின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை வந்தால் தலைவரிடம் கூறி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.