போர் வெறிக்குப் பின்னால்...
போர்வெறியை கிளப்பும் தீவிர ஆன்லைன் பதிவுகள் மோதல் களின் கடுமையான யதார்த்தங்களை மூடி மறைக்கின்றன. பஹல்காம் படுகொலையைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ விரிவாக்கம், தவறான தகவல்களால் சூழப்பட்டுள்ளது. இரு அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான சமீபத்திய மோதல் தொடங்கியதிலிருந்து, குறிப்பாக எல்லைப் பகுதியிலுள்ள மக்கள் போர் தொடர்பான செய்திகளைத் தீவிரமாகத் தேடியுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.
5 ஆண்டுகளாகப் பரப்பப்படும் போர் வெறி
கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகை யில் இது சமீபத்தில் மிகவும் அதிக அளவில் காணப்பட்டது. “அணுசக்தி” மற்றும் “ட்ரோன்கள்” என்னும் சொற்களுக்கான தேடல்கள் உச்சத்தை எட்டியது. பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஆர்வம் மற்றும் பதற்றம் இரண்டிலும் இது ஒரு உச்சபட்ச அளவைக் காட்டுகிறது.
5 லட்சம் பேரிடம் பரவியது
இருப்பினும் பல ஆன்லைன் பதிவுகள் உண்மையில் “நடக்காத நிகழ்ச்சிகளுக்கு” வழிவகுத்தன. மறுக்கப்பட்ட செய்தி நிகழ்வுகளை உண்மை தணிக்கையாளர்கள் (Fact checkers) ஆய்வு செய்தபோது, அவை புழக்கத்தில் உள்ள போலிக் கதைகளின் அளவையும் அதன் தன்மையையும் காட்டுகின்றன. கராச்சி துறைமுகம் அழிந்துவிட்டதாக ஒரு போலிச் செய்தி X தளத்தில் பதிவான உடன், சுமார் 5 லட்சம் பேர் அதைப் பார்த்தனர். ஆனால் இந்தப் படம் உண்மையில் காசாவில் உள்ள ரஃபாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல் நடைபெற்றபோது எடுக்கப்பட்டதாகும். பரவலாகப் பரப்பப்பட்ட மற்றுமொரு எரிச்சலூட்டும் பதிவு: இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியை ஒரு இந்திய ட்ரோன் தாக்கியது என்று பரப்பப்பட்டது. ஆனால் உண்மையில் அது முந்தைய ஆண்டு அங்கே நடந்த தீ விபத்தாகும்.
போலிச் செய்தியின் உள்நோக்கம்
பாகிஸ்தான், இந்தியா இரு நாடுகளிலும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல அதி தேசியவாதக் கூற்றுக்களை உண்மை சரி பார்ப்புத் தளம் Alt News அம்பலப்படுத்தி யுள்ளது. போர்வெறியை மூட்டும் வர்ணனை களும் இதற்குள்ளே நுட்பமாகப் புகுந்துள்ளன. போரின் மிகக் கடுமையான யதார்த்தத்தையும் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் இவை மறைக்க முயன்றன என்பதே உண்மை. கடந்த கால போர்களிலும் இந்தியா தொடர்பான நடவடிக்கைகளிலும், ஜம்மு - காஷ்மீர் நடவடிக்கை (1947, 1948), இந்தியா-சீனா போர் (1962), இந்தியா-பாகிஸ்தான் போர் (1965 மற்றும் 1971), கார்கில் போர் (1999) ஆகியவற்றில் 13,140க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். 26,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போர் வெறியின் ஆபத்து பல ஆண்டுகளாக நம் இரண்டு நாடு களுக்குள் அடிக்கடி ஏற்படும் மோதல்களால் நிதிச்சுமையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இடம்பிடித்து வந்துள்ளது. 2000 ஆண்டிற்குப் பின் முதல் ஐந்து இறக்குமதி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. 1992-93 ஆண்டு இடைவெளியில் மட்டும்தான் முதல் 10 இறக்குமதியாளர் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. ஆயுத இறக்குமதியைத் தவிர, அவற்றை உற்பத்தி செய்யவும் பராமரிக்கவும் கணிசமான தொகையை இந்தியா செலவிடுகிறது. போர் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மேலும் வர்த்தகத்தையும் பாதிக்கிறது. போரிடும் நாடுகள் மீது தடை விதிக்கப்படுவதாலும் நிதி வீழ்ச்சி ஏற்படுகிறது. அவற்றின் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது. இவையாவும் போர் வெறியைக் கிளப்பும் உள்நோக்கமுடைய பதிவுகள் மற்றும் தேடல்களின் பின்னே மறைக்கப்படுகின்றன.போர்வெறியை கிளப்பும் தீவிர ஆன்லைன் பதிவுகள் மோதல் களின் கடுமையான யதார்த்தங்களை மூடி மறைக்கின்றன. பஹல்காம் படுகொலையைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ விரிவாக்கம், தவறான தகவல்களால் சூழப்பட்டுள்ளது. இரு அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான சமீபத்திய மோதல் தொடங்கியதிலிருந்து, குறிப்பாக எல்லைப் பகுதியிலுள்ள மக்கள் போர் தொடர்பான செய்திகளைத் தீவிரமாகத் தேடியுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன. 5 ஆண்டுகளாகப் பரப்பப்படும் போர் வெறி கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகை யில் இது சமீபத்தில் மிகவும் அதிக அளவில் காணப்பட்டது. “அணுசக்தி” மற்றும் “ட்ரோன்கள்” என்னும் சொற்களுக்கான தேடல்கள் உச்சத்தை எட்டியது. பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஆர்வம் மற்றும் பதற்றம் இரண்டிலும் இது ஒரு உச்சபட்ச அளவைக் காட்டுகிறது. 5 லட்சம் பேரிடம் பரவியது இருப்பினும் பல ஆன்லைன் பதிவுகள் உண்மையில் “நடக்காத நிகழ்ச்சிகளுக்கு” வழிவகுத்தன. மறுக்கப்பட்ட செய்தி நிகழ்வுகளை உண்மை தணிக்கையாளர்கள் (Fact checkers) ஆய்வு செய்தபோது, அவை புழக்கத்தில் உள்ள போலிக் கதைகளின் அளவையும் அதன் தன்மையையும் காட்டுகின்றன. கராச்சி துறைமுகம் அழிந்துவிட்டதாக ஒரு போலிச் செய்தி X தளத்தில் பதிவான உடன், சுமார் 5 லட்சம் பேர் அதைப் பார்த்தனர். ஆனால் இந்தப் படம் உண்மையில் காசாவில் உள்ள ரஃபாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல் நடைபெற்றபோது எடுக்கப்பட்டதாகும். பரவலாகப் பரப்பப்பட்ட மற்றுமொரு எரிச்சலூட்டும் பதிவு: இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியை ஒரு இந்திய ட்ரோன் தாக்கியது என்று பரப்பப்பட்டது. ஆனால் உண்மையில் அது முந்தைய ஆண்டு அங்கே நடந்த தீ விபத்தாகும். போலிச் செய்தியின் உள்நோக்கம் பாகிஸ்தான், இந்தியா இரு நாடுகளிலும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல அதி தேசியவாதக் கூற்றுக்களை உண்மை சரி பார்ப்புத் தளம் Alt News அம்பலப்படுத்தி யுள்ளது. போர்வெறியை மூட்டும் வர்ணனை களும் இதற்குள்ளே நுட்பமாகப் புகுந்துள்ளன. போரின் மிகக் கடுமையான யதார்த்தத்தையும் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் இவை மறைக்க முயன்றன என்பதே உண்மை. கடந்த கால போர்களிலும் இந்தியா தொடர்பான நடவடிக்கைகளிலும், ஜம்மு - காஷ்மீர் நடவடிக்கை (1947, 1948), இந்தியா-சீனா போர் (1962), இந்தியா-பாகிஸ்தான் போர் (1965 மற்றும் 1971), கார்கில் போர் (1999) ஆகியவற்றில் 13,140க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். 26,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போர் வெறியின் ஆபத்து பல ஆண்டுகளாக நம் இரண்டு நாடு களுக்குள் அடிக்கடி ஏற்படும் மோதல்களால் நிதிச்சுமையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இடம்பிடித்து வந்துள்ளது. 2000 ஆண்டிற்குப் பின் முதல் ஐந்து இறக்குமதி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. 1992-93 ஆண்டு இடைவெளியில் மட்டும்தான் முதல் 10 இறக்குமதியாளர் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. ஆயுத இறக்குமதியைத் தவிர, அவற்றை உற்பத்தி செய்யவும் பராமரிக்கவும் கணிசமான தொகையை இந்தியா செலவிடுகிறது. போர் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மேலும் வர்த்தகத்தையும் பாதிக்கிறது. போரிடும் நாடுகள் மீது தடை விதிக்கப்படுவதாலும் நிதி வீழ்ச்சி ஏற்படுகிறது. அவற்றின் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது. இவையாவும் போர் வெறியைக் கிளப்பும் உள்நோக்கமுடைய பதிவுகள் மற்றும் தேடல்களின் பின்னே மறைக்கப்படுகின்றன.