tamilnadu

img

பிற மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை!

பிற மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை!

உச்சநீதிமன்றத்தை மிரட்டும் மோடி அரசு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

உதகை, மே 16 - ஆளுநர்களுக்கு எதிரான வழக்கில்,  குடியரசுத் தலைவரை முன்னிறுத்தி உச்சநீதிமன்றத்தை மிரட்டும் நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு  இறங்கியுள்ள நிலையில், இதுதொடர் பாக மற்ற மாநில முதல்வர்களிடமும், அரசியல் கட்சி தலைவர்களுடனும் விரைவில் ஆலோசனை செய்ய இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகைக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக வந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெள்ளிக்கிழமையன்று (மே 16) காலை இரண்டாவது நாளாக மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஆளுநருக்கு எதிரான  வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் அரசு விளக்கம் கேட்டுள்ள விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முத லமைச்சர், “பிற மாநில முத லமைச்சர்களிடமும், முக்கிய தலைவர் களிடமும் இந்த விவகாரம் குறித்து கருத்துக்கள் கேட்கப்படும். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அரசு தொடர்ந்து  சர்வாதிகார போக்கை கடைபிடித்துக் கொண்டிருக்கிறது” என்றார். தொடர்ந்து 2026 தேர்தல் குறித்து பேசிய அவர், “2026 மட்டுமல்ல 2031, 2036 தேர்தல்களிலும் திராவிட மாடல் ஆட்சியே நிலைத்து நிற்கும்” என தெரிவித்தார்.  மேலும், “உதகை பயணம் சிறப்பாக  அமைந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. மக்களைச் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. மக்கள் திமுக ஆட்சிக்கு தரும் ஆதரவைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுலா நிமித்தமாக வந்த மக்களும் திமுக அரசுக்கான ஆதரவை வெளிப்படுத்தும்போது மகிழ்ச்சியாக இருந்தது. மலர்க் கண்காட்சி எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது” என்றார். காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ள தாக கூறியுள்ளாரே? என செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர், “அது அவருடைய கருத்து” என்றார்.