tamilnadu

img

பிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமைச் செயலாளருடன் நேரில் சந்திப்பு!

பிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமைச் செயலாளருடன் நேரில் சந்திப்பு!

முக்கியப் பிரச்சனைகள் குறித்து முறையீடு

சென்னை, மே 16 - தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலா ளர் என். முருகானந்தம் அவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமு வேல்ராஜ் ஆகியோர் வெள்ளிக்கிழமை யன்று (16.05.2025) தலைமைச் செய லகத்தில் நேரில் சந்தித்தனர்.  அப்போது, முக்கியப் பிரச்சனைகள் தொடர்பான மனு ஒன்றை அளித்து, அதன் மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உடுமலை சங்கர் வழக்கு

குறிப்பாக, சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர்  வழக்கில், குற்றவாளிகளுக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள நிலையில், விரைந்து விசாரணை நடைபெறு வதற்கு அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடிக்கம்பங்கள் விவகாரம்

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங் களை அகற்றுவதற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதன் தீர்ப்பு வரும் வரை  கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கை களை மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைக்க வேண்டும்.

வழக்குகளை திரும்பப் பெறுக!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ள பின்னணியில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி  வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் போராடிய அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மீது புனைந்துள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளைக் கேட்டறிந்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.