tamilnadu

img

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பொதுத்துறைகளை சீரழிப்பதா! பி.ஆர்.நடராஜன் எம்.பி., கண்டனம்

கோவை, மார்ச் 1- ஜியோ நிறுவனம் லாபம் சம்பாதிக்க பிஎஸ்என்எல்லையும், கார்ப்பரேட் நல னுக்காக பொதுத்துறை நிறுவனங்களை யும் சீரழிக்கும் வகையில் மோடி ஆட்சி நடைபெறுவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றஞ் சாட்டியுள்ளார்.  இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற் றாண்டு விழா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம் சனியன்று கோவை வடக்கு நக ரக்குழு பகுதியில் நடைபெற்றது. கோவை  வடக்கு நகரக்குழுவிற்குட்பட்ட செக் கான்தோட்டம் ரயில்வே கிராசிங் அருகே  பி.விஜியகுமார் தலைமையில் நடைபெற் றது. ரா.செல்வம் வரவேற்றார். இதில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றி னார்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வளர்ச்சிக்காக கோவை வடக்கு நகரப்பகுதியில் கட்சியின் ஊழியர்கள் வீடுவீடாக சேகரித்த ரூ.2 லட்சத்து 29  ஆயிரத்து 230 நிதியை நகரக்குழு உறுப் பினர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் தலைவர்களிடம் வழங்கினர். முன்னதாக, பி.ஆர்.நடராஜன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஓராண்டில் ரூ.48 ஆயிரம் கோடி லஞ்சம் நடைபெற் றுள்ளதாக செய்தி வந்துள்ளது. மத்திய அதிகாரத்தில் உள்ள மோடி அரசு ஏழை எளிய மக்களின் நலனுக்கான அரசாக இல்லை. மாறாக பெரும் பணக்காரர்களின் நலனுக்கான அரசாக மட்டுமே ஆட்சியை நடத்துகிறது. 140 கோடி மக்கள் உள்ள இந்நாட்டின் மொத்த நிதியாதாரத்தில் 73 சதவிகிம் வெறும் 62 பணக்காரர்களின் கைகளில் சிக்கியுள்ளது. ஏழைக்கும் பணம் படைத்தவனுக்குமான இடைவெளி அதிக ரித்து கொண்டே வருகிறது. இந்த இடை வெளி நாட்டின் வளர்ச்சியை பெரிதும் தடுக்கும்.  ஒரு புறம் லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர் கள் மறுபுறம் பணம் படைத்தவர்கள் இவர்களுக்கான ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. மறுபுறம் சாதாரண மக்கள் பயன் படுத்தும் எரிபொருட்களின் விலை நாள் தோறும் ஏறிக்கொண்டே இருக்கிறது. ஓராண்டில் மட்டும் பெட்ரோல் விலை 13 ரூபாய் உயர்ந்துள்ளது. டில்லி தேர்தல் முடிந்த அடுத்த நாளே சமையல் எரிவாயு விலை 147 ரூபாய் உயர்த்தியுள்ளது. ஆனால் உழைப்பாளி மக்களின் வருவாய் சிறிதும் உயரவில்லை. வருவாய் உயர வில்லை என்பது மட்டுமல்ல இருக்கிற வேலையும் பறிபோகும் நிலை உருவாகி யுள்ளது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் தொழில் நசிந்து பெரும் பாதிப்பு ஏற்படுத்தியிருந் தது.  தற்போது கடும் பொருளாதார நெருக் கடியின் காரணமாக உள்ளூர் மக்க ளுக்கே வேலை இல்லாத நிலை ஏற்பட்டு அச்சத்தை உருவாக்கியுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. ஆனால் கார்ப்பரேட்டு களுக்கு மட்டும் திரும்பத்திரும்ப வரிச்சலு கைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஜியோ வின் வளர்ச்சிக்காக பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தையும், இதர  கார்ப்பரேட்டுகள் நலனுக்காக ரயில்வே,  எல்ஐசி, விமானம் உள்ளிட்ட பொதுத் துறைகளை சீரழிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை யெல்லாம் எதிர்த்த போராட்டங்கள் வலுப் பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் சிஏஏ போன்ற சட்டங்களால் மக்களின் கவ னத்தை திருப்புவதும், அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்றவர்களை வரவழைப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.  மோடி, அமித்ஷா அரசு இப்படித்தான் இருக்கும் என்பதை கேரளமும், தமிழகமும் முன்கூட்டியே உணர்ந்து கொண்டதால் தான் பாஜகவிற்கு எதிராக மக்கள் வாக் களித்தனர். அன்று ஏமாந்த வடஇந்திய மக்கள் இன்று உணர்ந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்தே இப்போது மோடி அரசிற்கு எதிரான போராட்டங்கள் வலுப் பெற்று வருகிறது. ஜார்கண்ட், மராட்டி யத்தில் பாஜகவின் தோல்வியை அடுத்து தற்போது டில்லியிலும் மண்ணை கவ்வி யுள்ளது பாஜக. இதனை உணர்ந்தும் தமிழக அதிமுக அரசு சிபிஐ, வருமான வரித்துறை ரெய்டுக்கு பயந்து பாஜகவின் அடிமைகளாக செயல்படுகின்றனர். அம் மாவின் ஆட்சி என்று சொல்லுகிற இவர் கள் அம்மாவின் கொள்கைகளுக்கு நேர்  எதிராக பாஜகவின் சொல்லுக்கு கட்டுப் படுகிறவர்களாக இருக்கின்றனர்.  தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கி றார்கள். ஆனாலும் பணம் கொடுத்து வாக் குகளை பெற்று விடலாம் என்கிற தப்பு கணக்கை அதிமுகவினர் போட்டுக்கொண் டிருக்கின்றனர். மக்கள் எவ்வளவு சலுகை அளித்தாலும் தங்களின் வாழ்நிலையை உரசிப்பார்த்துத்தான் வாக்களிப்பார்கள். அப்படியான வாய்ப்பை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். மக்கள் விரோத இந்த ஆட்சிகளுக்கு எதிராக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமில் லாத போராட்டத்தை நடத்தி வருகிறது.  அத்தகைய நியாயமான போராட்டத் திற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவ ளிக்க வேண்டும் என்றார். முன்னதாக இக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் வடக்கு நகரக்குழு செய லாளர் என்.ஆர்.முருகேசன், உறுப்பினர் கள் விஸ்வநாதன், நாச்சிமுத்து, நாராயண சாமி, சுந்தரம், சிவக்குமார் உள்ளிட்ட தலை வர்கள் உரையாற்றினர்.இதில், ஏராள மான பொதுமக்கள் பங்கேற்றனர். முடி வில் விவேக் நன்றி கூறினார்.