கோவை, செப்.29- கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதியில் நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் நன்றி அறிவிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.ஆர்.நடராஜன் கோவை வடக்கு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஞாயி றன்று நன்றி அறிவிப்பு பிரச்சாரம் மேற் கொண்டார். இதில், பி.என்.புதூரில் துவங் கிய சீரநாயக்கன்பாளையம், பூசாரிபாளை யம், சாயிபாபா காலணி, வேலாண்டி பாளையம், வடவள்ளி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் நன்றி அறிவிப்பு பிரச் சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரம் திமுக சட்டமன்ற உறுப் பினர் நா.கார்த்திக், பகுதி செயலாளர் சண் முகசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி யின் கோவை மாவட்ட செயலாளர் வி. இராமமூர்த்தி, மதிமுக பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஜேம்ஸ், புருசோத்தமன் மற்றும் சிபிஎம் வடக்கு நகரக்குழு செயலாளர் என்.ஆர்.முருகேசன், பேரூர் நகர செயலாளர் சேட்டு (எ) பாலசுப்பிரமணியம் மற்றும் வடவள்ளி மணி காங்கிரஸ், விசிக, கொமதேக உள் ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் இந்த பிரச் சார இயக்கத்தில் பங்கேற்றனர். இதில் ஏராளமான மக்கள் மற்றும் அமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.