tamilnadu

img

மதச்சார்பின்மையை பாதுகாத்திடுக கல்வியில் காவிமயத்தை புகுத்தாதே சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

கோவை, செப். 5-  சமூக நீதி, ஜனநாயகத்தின் மீது தொடுக் கப்படும் தாக்குதல்களை கண்டித்து தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச்சார்பின்மையை பாது காத்திட வேண்டும்.

காஷ்மீர் மாநிலத்தின் உரிமை பறிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களை தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ளதை கண்டித்தும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் போன்ற மக்கள் விரோத சட்டங் களை எதிர்த்து போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குளை திரும்பப் பெற வேண்டும்.கல்வியை காவிமயமாக் குதை தடுத்திட வேண்டும்.

தமிழக சிறைக ளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை கைதிகளாக உள்ள சிறைவாசிகளை விடு தலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வினர் சனியன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

கோவை கரும்புக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஜேரோம் ரோட்டிரிக் தலைமை வகித்தார். இதில், செயலாளர் முகமது முசீர், பொருளா ளர் எஸ்.புனிதா மற்றும் எஸ்.கருப்பையா, ரவிச்சந்திரன், நாகேந்திரன் உள்ளிட்ட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.  

அன்னூர் பயனியர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் முகமது முசீர் தலைமை வகித் தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமா னோர் பங்கேற்று கோரிக்கைகளை  வலியு றுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

ரோடு

 ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மறைந்த தோழர் டி.லட்சுமணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.