tamilnadu

img

நிலத்தை அபகரிக்க முயற்சி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

கோவை, ஏப். 22–சூலூர் அருகே உள்ள தங்களது 3 சென்ட்நிலத்தை ஒருவர் அபகரிக்க முயற்சி செய்வதாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று குற்றம் சாட்டி பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்-தேன்மொழி தம்பதியினர். இத்தம்பதிக்கு ஜெய் ஆதித்யா மற்றும் ஜீவன் ஆதித்யா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் சோதனைக்கூட உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த செந்தில்குமார் அங்கு திடீரென குடும்பத்துடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், தங்களுக்கு சூலூர் அரசு மருத்துவமனை அருகில் 30 செண்ட் பூர்வீக இடம் உள்ளது. குடும்ப சூழல் காரணமாக பெரும்பாலான இடத்தை விற்று விட்டோம். இன்னும் மூன்றரை செண்ட் நிலம் உள்ளது. இதனைஅரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் மற்றும் அவரது கணவர் தூண்டுதலின் காரணமாக இந்த நிலத்தை சிலர் அபகரிக்க முயல்கின்றனர். இது குறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். மேலும் இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் தங்களை அடி ஆட்களை வைத்து மிரட்டுகின்றனர். எங்களது நிலத்தை மீட்டு எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தோம். அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் தலையிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுப்பிவைத்தனர்.