புதுதில்லி:
காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர், கிஷோர் குர்ஜார். இவர்,ஹோட்டல் உரிமம் தொடர்பான விவகாரத்தில், அப்பகுதியின் உணவு ஆய்வாளர் (Food Inspector) அசுதோஷ் சிங்கை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குர்ஜார் சட்டப்பேரவையில் விளக்கம்ளிக்க முயன்றதற்கு, சபாநாயகர் நாராயண் தீக்ஷித் அனுமதி மறுத்துள்ளார். அமைச்சர் சுரேஷ் கண்ணாவும் குர்ஜாரை பேச அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.இதையடுத்து குர்ஜார், சட்டமன்றத்திற்கு உள்ளேயே தர்ணாவில் ஈடுபட்டார். அடுத்த சில நொடிகளில், அவருக்குஆதரவாக 100-க்கும் அதிகமான பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள்இணைந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், தன் கட்சியைச் சேர்ந்தவர்களே தன்னைக் கொலை செய்ய நினைப்பதாக பாஜக எம்.எல்.ஏ குர்ஜார்,உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.