districts

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜூலை 26 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முடிவு

தஞ்சாவூர், ஜூலை 3 -  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு  தர்ணா போராட்டம் நடத்துவதென, தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்  தஞ்சாவூரில் எழுச்சி தின கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்டத்  தலைவர் சிவ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்க சாமி வரவேற்றார். மாநில தலைவர் மு.அன்ப ரசு, முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினர். கருத்தரங்குக்கு பின், தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத்  தலைவர் சிவ.ரவிச்சந்திரன் செய்தியாளர் களிடம் கூறுகையில், “தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் சார்பில் அனைத்து மாவட்டத்தி லும் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடத்தப் பட்டு வருகிறது. தமிழக அரசு புதிதாக பதவி  ஏற்ற பிறகு, எதிர்க்கட்சியாக இருந்த போது கொடுத்த வாக்குறுதிகளையும், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்ப தற்கான ஆயத்த கூட்ட ஏற்பாடுதான் இந்த  எழுச்சி தின கருத்தரங்கம். தமிழக அரசு உடனடியாக அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேசி, தேர்தல் கால வாக்குறுதிகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, கால முறை ஊதியம் பெறாத சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்கள், வருவாய் கிராம  உதவியாளர்கள், கிராமப்புற செவிலியர் கள், நூலக பணியாளர்களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 3 சத வீத அகவிலைப்படியை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். முடக்கப்பட்ட விடுப்பு சரண்டரை விடுவித்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து  வைக்க வேண்டும். இதற்கும் தமிழக அரசு உடன்பட்டு பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றால், ஜூலை  26 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவல கங்கள் முன்னால் அரைநாள் தர்ணா போராட் டமும், அதன் பின்பு, ஆக.23 ஆம் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகை யிடும் போராட்டம் நடைபெறவுள்ளது. அதற்குள் நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும்”  என்றார்.

திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்டக் குழு சார்பில் திருச்சி  மத்திய ஆர்.சி.மேல்நிலைப் பள்ளியில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைத்தலைவர் சந்திர சேகரன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெய ராமன், ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிராஜூதீன் ஆகியோர் பேசி னர். மாநில துணைத் தலைவர் ஞானதம்பி சிறப்புரையாற்றினார்.