tamilnadu

img

சூறைக்காற்றில் சிக்கி வாழைமரங்கள் சேதம் - உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

 மேட்டுப்பாளையம், மே 26 - மேட்டுப்பாளையத்தில் வீசிய சூறைக் காற்றில் சிக்கி அறுவடைக்கு தயாராக இருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனை  இயற்கை பேரிடராகக் கருதி உரிய இழப் பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத் துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் திங்களன்று இரவு வீசிய சூறைக் காற்றில் சிக்கி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து சேதமானது. மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவது டன் மாலைநேரங்களில் பலத்த  காற்றுடன் மழைபெய்து வருகிறது. அதோடு மழை பெய்யத்துவங்கும் முன்  கடும் சூறைக்காற்று வீசுகிறது. இந்நிலை யில், திங்களன்று இரவு மீண்டும் மழை யுடன் பலத்த காற்று வீசத்துவங்கியது.

சுழன்றடித்த சூறாவளிக்காற்றில் சிக்கி  மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட் பட்ட கிராமங்களான கெம்மாரம்பாளை யம், தோலம்பாளையம், கண்டியூர் உள் ளிட்ட பகுதிகளில் பயிரடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேத மானது. அறுவடைக்கு இன்னும் ஓரிரு வாரங்களே இருந்த நிலையில் குலை தள்ளி யிருந்த கதிலி, ரொபஸ்டா, நேந்திரன், ரஸ்தாலி உள்ளிட்ட வாழை ரக மரங்கள் முறிந்து விட்டன. பதினோரு மாதப் பயிரான வாழை மரங்கள் பத்தாவது மாதம் முடிந்த நிலையில் ஒரே இரவில் முற்றி லுமாக சாய்ந்து, இப்பகுதி வாழை விவ சாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடன் பெற்று போட்ட முதலீடும், உழைப் பும் வீணாகி விட்டதாக வேதனை தெரி விக்கும் விவசாயிகள், வாழைகள் காற்றில் சிக்கி சேதமானால் உரிய இழப்பீடு கிடைப் பதில்லை. இதனை இயற்கை பேரிடர் பட்டியலில் இணைத்து சேதமான வாழை களை சரியாக கணக்கெடுத்து முதலீடு போட்ட தொகையாவது திரும்ப கிடைக் கும் வகையில் இழப்பீடு வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.