tamilnadu

தேவிபட்டணத்தில் பலத்த சூறைக்காற்று: பல ஆயிரம் ஏக்கர் பணப் பயிர்கள் சேதம் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருநெல்வேலி, ஆக.8- தென்காசி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில் பலத்த சூறைக்காற்று காரண மாக மரங்கள், மின்கம்பங் கள் சேதம் அடைந்தன. பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவி பட்டணம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், சின்னாடப்பேரி, விஸ்வ லிங்கபேரி, வழிவழிகுளம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை, மா, வாழை, கொய்யா உள் ளிட்டவை அதிகளவில் பயி ரிடப்பட்டுள்ள.  தற்போது தொடர் சாரல் மழை காரணமாக இப்பகுதி களில் அடிக்கடி காற்றின் வேகம் அதிகரிக்கிறது. இந் நிலையில் திடீரென இப்பகு தியில் ஏற்பட்ட சூறாவளி காற்றின் காரணமாக மரங் கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சேதமாகி கீழே விழுந்தன.

இதனால் இப்பகு தியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள பணபல பயிர்கள், மரங்கள் சேதமாகி இருப்பதால் விவ சாயிகளின் வாழ்வாதா ரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளது. மேலும் இப்பகுதியில் பயிரிடப்பட்ட கரும்புகளும் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற் படுத்தியுள்ளது. மின் கம்பங்கள் சீர் செய்யும் பணி யில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.  விவசாய பகுதிகளில் மின்கம்பங்கள் சீரமைப்பு பணி காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. சூறாவளி காற்றி னால் சேதமான விவசாய பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.