tamilnadu

img

தனியார் வங்கியின் மிரட்டலால் தீக்குளித்த இளைஞர் பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் உரிய இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.29- தஞ்சாவூர் அருகே வல்லம் சிட்டி  யூனியன் வங்கியின் முன்பு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கண்டன  ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடை பெற்றது.  அசலை விட கூடுதல் செலுத்தியும் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு, வீட்டை ஏலம் விடுவதாக, மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்துக்கு நீதி கேட்டும், வங்கி மேலாளர், சம்ப ந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் சின்னை.பாண்டியன், எம்.மாலதி, பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச் செல்வி, தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் என்.குரு சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே. அபிமன்னன், பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், கிளைச் செய லாளர்கள், குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.  இதையடுத்து வல்லம் டிஎஸ்பி அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக வல்லம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வ லமாகச் சென்று சிட்டி யூனியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திடீர் மரணம்
இந்நிலையில், தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகி ச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பல னின்றி சனிக்கிழமை நண்பகலில் கால மானார். இதையடுத்து சிபிஎம் நிர்வாகி கள், ஆனந்த் குடும்பத்தினர் மருத்துவ மனைக்கு விரைந்தனர்.  பின்னர் ஆனந்தின் குடும்பத்தினர், வங்கி மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரை உடலை உடற்கூ ராய்வு செய்ய அனுமதிக்கவும், உட லைப் பெற்றுக் கொள்ளவும் மாட்டோம்  எனத் தெரிவித்தனர். இதையடுத்து ஆன ந்த் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. காவல்துறையினர், வருவா ய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி  வருகின்றனர்.
சிபிஎம் கோரிக்கை 
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம் கூறுகையில், “மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் இறந்து விட்டார் என்ற செய்தி  அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடு ம்பத்துக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். ஆனந்த் தற்கொலை க்கு காரணமான, வங்கி மேலாளர், வங்கி  அலுவலர்கள் மீது, தற்கொலைக்கு தூண்டிய வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும். ஆனந்த் குடும்பத்தின் எதிர்காலம் கருதி,  குடும்பத்தில் ஒருவருக்கு, வங்கியில் வேலை வழங்க வேண்டும். ஆனந்தின் மகன்களின் கல்விச் செலவு, எதிர்கா லத்தை கருத்தில் கொண்டு உரிய இழ ப்பீடு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்” என்றார்.