திருவண்ணாமலை,மார்ச் 25- வந்தவாசி நகரத்தில் போக்கு வரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து வட்டார செயலாளர் அப்துல்காதர் தலைமையில் காவல் துறை கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறி யிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா 3ஆவது பெரிய நகரமாகும். வந்தவாசி வட்டத்தின் கீழ் 8 உள் வட்டங்களும், 161 வருவாய் கிராமங்களும் உள்ளன. வந்தவாசி, பெரணமல்லூர், மற்றும் தெள்ளாறு ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளது. 2023ஆம் ஆண்டுப்படி வந்தவாசி தாலுகா மக்கள் தொகை 1,46,507 ஆகும். வந்தவாசி நக ரத்தில் கோரைப்பாய் நெய்தல் முக்கியத் தொழிலாக உள்ளது. வந்தவாசி காவல் உட்கோட்டத்தில் வந்தவாசி வடக்கு, வந்தவாசி தெற்கு, வந்த வாசி அனைத்து மகளிர் காவல் நிலையம், கீழ்க்கொடுங்கலூர், தெள்ளார். பொன்னூர், தேசூர் மற்றும் வடவணக்கம்பாடி காவல் நிலையங்கள் உள்ளன. மேற்கண்ட காவல் நிலையங்களில் 40 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 60 சதம் காலிப் பணியிடங்களாக உள்ளது. இதனால் சட்ட ஒழுங்கை பேணிக்காத்தல், குற்றச் செயல்களை தடுத்தல், இரவு ரோந்து, போக்குவரத்து சீரமைப்பு, விழாக்கால பாது காப்புகள், நீதிமன்ற பணிகள் செய்வதில் தொய்வும், பணியாளர்களுக்கு மன உளைச்சலும் ஏற்படுகிறது. மேலும் பணியாளர்களுக்கு ஓய்வு அளிக்காமல் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்துவதால், அவர்களுக்கு மன ரீதியான பாதிப்புகளும், குடும்பங்களில் பிரச்சினைகளும் ஏற்படுகிறது. எனவே, வந்தவாசி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களைக் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், பெருகிவரும் வாகன பயன்பாடு காரணமாக நகர்ப்புறத்தில் அதிகமான போக்குவரத்து விதிமீறல்கள் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு வந்தவாசியை தலை மையிடமாகக் கொண்டு வந்த வாசி நகரத்தில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.