tamilnadu

img

மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் நெருக்கடி - தனி அதிகாரியை நியமிக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்

கோவை,  ஜூன் 15 - சட்டத்திற்கு புறம்பான வகையில் வசூல் செய்யும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக் கவும், இது தொடர்பான புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் வலி யுறுத்தியுள்ளனர்.  இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில்  கோவை மாவட்ட ஆட்சியரிடம்  அளித்த மனுவில் கூறியிருப்பதா வது,கொரோனா தொற்று காரணமாக  ஊரடங்கு நீடித்து வருகிறது. இந்நி லையில் மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெற்ற கடன்களுக்கு அதிக  வட்டியை இந்நிறுவனங்கள் வசூ லிக்கின்றன. உடனே திருப்பி செலுத்த  தொலைப்பேசி மூலமும் நேரடி ஆட்கள் மூலமாகவும் அதிக வட்டி  செலுத்த வேண்டும் என தொடர்ந்து  மிரட்டப்படுகின்றனர்.  எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, இது போன்ற புகார்களை விசாரிக்க தனி அதிகா ரியை நியமிக்க வேண்டும் எனவும், ஹெல்ப் லைன் எண்ணை அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட் டிருந்தனர். முன்னதாக, இச்சங்கத்தின் மாவட் டச் செயலாளர் ஏ.ராதிகா, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி உள் ளிட்ட நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட பெண்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.