tamilnadu

img

சிபிஎம் மூத்த தோழர் ஜி.பி.ராஜகோபால் காலமானார்

சேலம், மே 22- மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட மூத்த தோழர்  ஜி.பி.ராஜகோபால் உடல் நலகுறைவால் வியாழ னன்று காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட குழு உறுப்பி னராகவும், ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி இடைகமிட்டி செயலாளராகவும், விவசாய  சங்க மாவட்ட தலைவராக வும் செயலாற்றி வந்தவர்  தோழர்  ஜி.பி. ராஜகோபால். கடந்த சில நாட்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த அவர் வியாழனன்று காலமானார். இவருக்கு சின்ன பொண்ணு என்கிற மனைவியும் ராமமூர்த்தி என்கிற மகனும், இரண்டு  மகள்களும் உள்ளனர். தோழரின் மறைவிற்கு சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், பி.செல்வசிங் ஆகியோர் தொலைபேசி வாயிலாக தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும், மறைந்த ஜி.பி.ஆர் உடலுக்கு கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், எ.முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பொன்னுசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தங்கவேல், பெரிய சாமி, சிபிஐ விவசாய சங்க கௌரவத் தலைவர் ஆர்.பி.இராம சாமி, சிபிஎம் வாழப்பாடி தாலுகா செயலாளர் பழனிமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.