கந்து வட்டி கொடுமையால் தற்கொலை:
நாமக்கல், செப்.27- குமாரபாளையம் அருகே கந்து வட்டி கொடுமையால் தற் கொலை செய்து கொண்ட விசைத்தறி தொழிலாளியின் குடும்பத்தினரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி தொழி லாளி ராஜூ. இவரது மனைவி விசாலாட்சி. இவர் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் குமார பாளையத்தில் இயங்கி வரும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறு வனத்தில் கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக்கு 30 சதவிகித வட்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடன் தொகை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் ராஜூ மற்றும் அவ ரது மனைவியை தரக்குறைவாக பேசி தொடர்ந்து மிரட்டல் விடுத் ததால் பெரும் மன உளைச்சலுக் குள்ளான ராஜூ வியாழனன்று தற்கொலை செய்து கொண் டார். இந்த சம்பவம் அப்பகுதி யினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெள்ளியன்று இவரது குடும்பத்தினரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, குமாரபாளையம் நகரச் செயலாளர் இ.பி.ஆறு முகம், நகரக் குழு உறுப்பினர் எஸ்.சக்திவேல் மற்றும் சண்முகம், வெங்கடேஷ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதன்பின்னர், சிபிஎம் மாவட் டச் செயலாளர் எஸ்.கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறுகை யில், குமாரபாளையம் உள்ளிட்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் கந்துவட்டி தொழிலை முழுவது மாக தடை செய்ய உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். குறிப் பாக, விசைத்தறி தொழிலாளர் களை மையப்படுத்தி கடன் தரு வது, அவர்களை கடன் வலையில் சிக்க வைத்து அதிக வட்டியை வசூல் செய்வது போன்ற முறை யில் செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் என பல்வேறு பெயர் களில் செயல்படும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நடை பெறும் கந்துவட்டி புகார்கள் மீது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகி யோர் உடனடியாக தலையீடு செய்து உரிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தெரி வித்தார்.