கடனை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கவேண்டும்
கோவை,மார்ச் 18 – கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கோவை தொழிற் துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வங்கி யில் பெற்ற கடனை திருப்பி செலுத்த ஒரு வருட காலஅவகாசம் அளிக்க வேண்டும் என சிறுகுறு தொழில்முனைவோர் (டேக்ட்) மற்றும் தென்னிந்திய மில் சங்கம் (சைமா) ஆகியவன மத்திய அர சுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தாக்கு தலில் இருந்து மக்களைப் பாது காக்க அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. பள்ளி கள், கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள் ஆகிய அனைத்தும் மூடபட்ட நிலை யில் பிறமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் எங்கும் செல்லக் கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் நாடு முழுவதுமுள்ள தொழில்கள், வியாபாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது.
இந்நிலையில், தொழில் நகர மான கோவையில் சிறு, குறு நடுத் தர தொழில்கள் என 50 ஆயிரத்துக் கும் மேல் இயங்கி வருகிறது. இதில் லட்சத்துக்கும் மேற்பட்ட தொழி லாளிகள் பணியாற்றி வருகிறார் கள். ஏற்கனவே கடும் நெருக்கடி யில் தொழில்கள் உள்ள நிலையில் கோவையின் மிக முக்கிய உற்பத் தியான மோட்டர் பம்ப் செட்டுகள், வெட்கிரைண்டர்கள், ஆட்டோ மொபைல்ஸ் ஸ்பேர்கள் என தென் மாநிலங்களான கேரளா, கர்நா டக மற்றும் ஆந்திராவில் அதிக அளவு கொள்முதல் செய்ப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வியபாரமும் முடங்கி உள்ளதால் கடுமையாக உற்பத் திகள் பாதித்து பெரும் வேலை இழப்பு ஏற்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த நெருக்கspடியில் இருந்து தொழில் களை பாதுகாக்கவும், தொழிலாளி களை பாதுகாக்கவும் அரசு முன் வரவேண்டும். தொழில்களின் உற்பத்தி திறனுக்கு தக்கவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லாத கடனாக உட னடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகளில் தொழில் முனை வோர்கள் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த ஒரு ஆண்டுகள் கால நிட்டிப்பு தர வேண்டும் அதற் கான வட்டிகள் அபராதம் வட்டிக ளையும் தள்ளுபடி செய்ய வேண் டும். கொரோனாவின் கடும் பாதிப் பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள், மக்களின் நலன் கருதி தேவையான பொரு ள்களை ரேசன் முலம் வழங்கிட நடவடிக்கை எடுத்து நாட்டு மக்களை காத்திட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தியுள் ளார். இதேபோல், தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலை வர் அஸ்வின் சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத் தியுள்ளது. மக்களின் வாழ்வை யும், தொழில்துறை உற்பத்தி மற்றும் வணிகத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதன் தாக்கம் தற்போது இந்தியாவிலும் ஏற்பட் டுள்ளது. தமிழக ஜவுளி ஆலைக ளில் வெளிமாநில தொழிலாளர் கள் அதிகளவில் பணிபுரிகின்ற னர். தற்போது கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகை யில் அரசு பல்வேறு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இதனால் சொந்த மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. அதேபோல் ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்று மதி, இறக்குமதி நிறுத்தம், வணிக வளாகங்கள் மூடல் போன்ற கார ணங்களால் ஜவுளி பொருட்களுக் கான தேவையும் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் ஜவுளி நிறுவனங்கள் எதிர்பாராத இழப்பை சந்திக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. அதிக மூல தனத்தையும், தொழிலாளர்க ளையும் கொண்டு இயங்கும் ஜவுளித்துறை இந்த சிக்கலான சூழலில் இருந்து மீள அரசின் உதவி உடனடியாக தேவைப்படு கிறது.
இதுபோன்ற இக்கட்டானச் சூழலை ஜவுளித்துறை முன்னெப் போதும் சந்தித்ததில்லை. ஜவுளி நிறுவனங்கள் வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் மட்டும் வட்டியை திருப்பி செலுத்துவ தற்கு குறைந்தபட்சம் ஒருவருட கால அவகாசம் (ஏப்ரல் 1- மார்ச் 31) வழங்க வேண்டும். இந்த சலுகையை வழங்கினால் தான் ஜவுளித்துறை தற்போது சந்தித்து வரும் சூழலில் இருந்து மீண்டு தொழிலை காப்பாற்ற முடியும் என்றார். மேலும், இந்த கோரிக் கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட் டுள்ளது என தெரிவித்துள்ளார்.