tamilnadu

img

ஹைட்ராக்சிகுளோரோகுயின் - அமெரிக்கர்களின் உயிரோடு விளையாடும் டிரம்ப்

கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சி குளோகுயினை பயன்படுத்தினால் அந்த நோயாளிகள் மரணம், கடுமையான இதயப்பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஹைட்ராக்சி குளோரோகுயின் ஆபத்துகள் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) எச்சரித்துள்ளது. மரணம் உள்ளிட்ட கடுமையான இதயப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென அது கூறியுள்ளது. 

“கடுமையான இதயப்பிரச்சினைகள்” உள்ள வர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மருந்துகளான குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்தி ரைகளை பயன்படுத்தக்கூடாது என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெள்ளிக்கிழமை எச்ச ரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்துள்ளவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோ குயின் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவ பரிசோதனை முடிவு கள் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த மருந்துகளை ஒரு  கேம் சேஞ்சர் (ஆட்டத்தையே மாற்றக் கூடியது) என்று அழைத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆக்ரோஷமாக ஊக்குவித்து வருகிறார்.

தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள், அறிக்கைகள் பாதுகாப்பு சிக்கல்களை எழுப்பி யுள்ளன, நிரூபிக்கப்படாத மருத்துவ யோசனை களை ஜனாதிபதி டிரம்ப் அரவணைப்பது அமெ ரிக்கர்களின் உயிருக்கு ஆபத்தை விளை விக்கும்.  இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட வர்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளின் பாது காப்பு, செயல்திறன் ஆகியவற்றை தீர்மானிக்க மருத்துவ பரிசோதனைகள் நடந்து கொண்டிருக் கின்றன. இந்த மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை கண்காணிக்க வேண்டுமெறு எப்.டி.ஏ. ஆணையர் ஸ்டீபன் ஹான்  அறிக்கை யொன்றில் தெரிவித்துள்ளார். அபாயங்களை தணிப்பதற்காக  நோயாளிகளை நெருக்கமாக  கண்காணிக்கவும், தனிப்பட்ட நோயாளிகளின் நோய்த் தொற்றை உறுதி செய்யும் சுகாதாரப் பாது காப்பு நிபுணர்களை ஊக்குவித்து வருகிறோம் என்றும் ஸ்டீபன் ஹான் கூறியுள்ளார். 

வாஷிங்டன் போஸ்ட் இணையதளத்திலிருந்து