tamilnadu

img

பொள்ளாச்சியில் கொரோனா வைரஸ் தொற்று: அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

தேனி, ஜூன் 21- தேனி மாவட்டத்தில் சனிக்  கிழமை நிலவரப்படி இரண்டு அரசு மருத்துவர், காவல் சார்பு  ஆய்வாளர் உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . தேனி ஆட்சியர் அலுவல கத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு அறையில் பணி யாற்றிய மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளம் தற்காலிகமாக மூடப் பட்டது. .எனினும் ஆட்சியர் அறைக்கு அழகுபடுத்தும் பணிக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக முதல்  தளத்தில் மாவட்ட ஆட்சியர் அறை, மாவட்ட வருவாய் அலுவ லர் அறை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவ லகம், செய்தி மக்கள் தொடர்பு  அலுவலகம், தேர்தல் பிரிவு,  இ-பாஸ் வழங்கும் அலுவல கம், கூட்டரங்கு ஆகியவை இயங்குகிறது.

இந்த அலுவல கங்கள் தற்காலிகமாக இரண்டாம் தளத்தில் செயல்பட வும், ஐம்பது சதவீத ஊழியர் கள் மட்டும் பணிக்கு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா அச்சத்தில் ஊழியர்கள் இருப்பதால் ஆட்சி யர் அறை உள்ளிட்ட அலுவல கங்களை தற்காலிகமாக மூட  மாவட்ட ஆட்சியர் தடை விதித்து  விட்டு தனது அலுவலகத்தை அழகுபடுத்தும் பணிக்கு மட்டும் தடை விதிக்கவில்லை.  கொரோனா தொற்று தடுப்பு  நடவடிக்கைக்கு  மாநில, மத்திய அரசோ தனியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  எவ்வித நிதி யும் ஒதுக்கவில்லை. பல கிராம  ஊராட்சிகளில் பணியாளர்க ளுக்கு சம்பளம் போட முடி யாத, மின் கட்டணத்தை செலுத்த  முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையிலும் கூட  தனி யார் பங்கேற்புடன் கொரோனா  அச்சுறுத்தலை மீறி தனது அலு வலகத்தை அழகுபடுத்தி வருகிறார் தேனி ஆட்சியர் என்கின்றனர் சமூக ஆர்வ லர்கள்.