tamilnadu

img

கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

சேலம், மார்ச் 11- சேலம் மாநகராட்சி  சார்பில் கரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநக ராட்சி ஆணையாளர் புத னன்று துவக்கிவைத்தார். சேலம் மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பொது மக்களிடையே கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத் திடும் வகையில், துண்டு  பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்வு சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும்  அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சதீஷ்  இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து கரோனா  வைரஸ் காய்ச்சல் குறித்தும் தடுப்பு நடவ டிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். இதனையடுத்து பொதுமக்களிடையே கரோனா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் நோய் பரவும் விதத்தினை கண்ட றிந்து அவற்றிலிருந்து தற்காத்துக் கொள் வதற்கான முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆணையாளர் வெளியிட்டார். மேலும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் 6 நிலைகளில் கைகள் கழுவும் முறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல் முறை விளக்கங்களும் செய்து காண்பிக் கப்பட்டது.