பொள்ளாச்சி, ஜூன் 24- பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கோட் டூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் ஒருவருக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்னர் அவருக்கு கோட்டூர் அரசு மருத்துமனையில் கொரோனோ தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், புதனன்று பரிசோதனை முடிவு வெளியானது. அதில் அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.