கோவை, ஜூன் 12- கோவையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை கீரணத் தம் பகுதிக்கு வந்தடைந்த 29 வயது இளைஞர் மற்றும் சாலை வழியாக சென்னையில் இருந்து வந்த மேட்டுப்பா ளையத்தை சேர்ந்த 52 வயது நபர் ஆகிய இருவருக்கும் வெள்ளியன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இருவரும் கோவை சிங்கா நல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வியாழக் கிழமை வரை 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவையைப் பொருத்தவரை தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 45 பேரும், தனியார் மருத்துவமனையில் 15 பேரும் என மொத்தம் 60 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள னர்.
அவர்களது குடும்பத்தார் அனைவரையும் சுகாதா ரத்துறையினர் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.