கோவை, ஆக. 16– கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இன்னும் இரு வருடங்க ளுக்கு நீடிக்குமென இந்திய மருத் துவ சங்க தமிழ் மாநிலச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்தார். கோவையில் புரூக் பாண்ட் சாலையில் அமைந்துள்ள இந்திய மருத்துவர் சங்க அலுவலகத்தில் இந்திய மருத்துவ சங்க தமிழ் நாடு செயலாளர் டாக்டர் ரவிக் குமார் செய்தியாளர்களை சந்தித் துப் பேசியபோது தெரிவித்ததா வது, உலகளவில் பல லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள னர். கடந்த 3 மாதத்தில் மட்டும் 58 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், 32 மருத்துவர்கள் கொரோ னாவால் மட்டும் உயிரிழந்திருக் கின்றனர். இவ்வாறு உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு அரசு சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
மேலும், கொரோனா பரி சோதனை மையங்கள் அதிகரிக் கப்பட வேண்டும். இதற்கான உரி மத்தை அரசு உடனடியாக வழங் கிட வேண்டும். இந்த நோய்த்தொற்று மிகவும் அபாயகரமானதால் அதற்கு சிகிச்சை அளிக்ககூடிய மருத்துவர்க ளும், செவிலியர்களும் முள் மீது நடப்பது போன்று முதல் வரிசையில் களப்பணியாளர்களாக போராடி வருகின்றனர். எனவே அவர்களுக் குரிய சிகிச்சைப் பாதுகாப்பு உபக ரணங்கள், பாதுகாப்பு நடவடிக்கை களை உறுதிசெய்திட வேண்டும். கொரோனா நோய்த்தொற்று அடுத்த இரண்டு வருடங்கள் வரை நம்மை விட்டு நீங்காது. எனவே தனி மனித கட்டுபாடுகள் மிக முக்கி யம். முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, தனிமனித இடைவெ ளியை கடைபிடிப்பது போன்ற அர சின் கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.
அப் போதுதான் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முடி யும். அரசின் ஊரடங்கு உத்தரவும், இ-பாஸ் முறையும் கொரோனா வைக் கட்டுப்படுத்த முன்னதாக பெரிய அளவில் உதவியிருப்பினும் தற்போது மீண்டும் ஊரடங்கு, மீண்டும் இ-பாஸ் என்னும் முறை எந்தளவிற்கு பயனுள்ளதாக இருக் கும் என தெரியவில்லை. இதுதவிர தனியார் மருத்துவமனைகளுக்குக் கிடைக்கக் கூடிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதால் அதை சரிசெய்ய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டு சேமிப்பு இடங்கள் அதிகப்படுத்தப் பட வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.