tamilnadu

img

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், பிப். 3- ராசிபுரம் நகராட்சி, பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் அமைக் கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், வெண் ணந்தூர் பேரூராட்சியில் வெண் ணந்தூர் ஏரியினை மேம்பாடு செய்தல் பணியினையும், ராசிபு ரம் நகராட்சியில், பாதாள சாக் கடை திட்டத்தின்கீழ் அமைக் கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், மாவட்ட ஆட்சி யர் கா.மெகராஜ் திங்களன்று நேரில் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் முதலாவ தாக, வெண்ணந்தூர் பேரூராட் சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை நிதியின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் 68 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெண்ணந் தூர் ஏரியில் முட்புதர்களை அகற் றுதல்,  கரையின் மேற்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை அமைக்கப்பட்டு வரும் பணியினையும் மாவட்ட  ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், ஏரி மேம்பாட்டு திட்டத் தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சிறுவர் பூங்கா மற்றும் ஏரிக்கு நீர் வரும் பாதைகள் ஆகியவற் றையும் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, ராசி புரம் நகராட்சியில் பாதாள சாக் கடை திட்டத்தின் கீழ் தட்டாங் குட்டை பகுதியில் அமைக்கப் பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், குப்பை பொருட்கள் பிரிக்கப்படுவதையும், மீதமுள்ள கழிவுநீர் இயந்திரங்கள் மூலம் சுழற்றப்பட்டு காற்றோட்டம் செய்யும் தொட்டிகளுக்கு மோட் டர் பம்புகள் மூலம் அனுப்பப்படு வதையும், அங்கு கழிவுநீருக் குள் தொடர்ந்து காற்று செலுத்தப் பட்டு மாசுப்பொருட்கள் தொட்டி யின் கீழ் பகுதியில் சேகாரமா கும் பணிகளையும் நேரில் பார்வை யிட்டார். இந்த ஆய்வின் போது தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர் வாக பொறியாளர் டி.குமார், உதவி நிர்வாக பொறியாளர் சி. சிவமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவா சன், மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கி.மோகன்ராஜ், ராசிபு ரம் வட்டாட்சியர் பாஸ்கரன் உட் பட ராசிபுரம் நகராட்சி அலுவ லர்கள் மற்றும் செய்தியா ளர்கள் கலந்துகொண்டனர்.