tamilnadu

img

கோவை: தனியார் வர்த்தகக் கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை, ஜூலை 2- கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள தனியார் கடை களில், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி புதனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. அதனடிப்படையில், கோவை மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழிற்சாலைகள், நகைக் கடைகள், உணவகங்கள், மளிகை கடைகளுக்கு வரும் பணி யாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தவறாது முகக்க வசம், உரிய தனிமனித இடைவெளி ஆகியவற்றை கட்டா யம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 100 சத விகிதம் குளிர்சாதன வசதி பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத னடிப்படையில், கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதி யில் உள்ள தனியார் கடைகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அரசு நெறிமுறைகளை முறையாக பின்பற்றவும் கடை உரிமை யாளர்களிடம் அறிவுறுத்தினார்.