tamilnadu

img

வாடகை தராததால் கடையை சேதப்படுத்திய கட்டிட உரிமையாளர்

கோவை, செப். 4- கோவையில் வாடகை தராததால் கடையை சேதப்படுத்திய கட்டிட உரி மையாளர் மீது பாதிக்கப்பட்டவர் மாந கர காவல் ஆணையரிடம் புகார் அளித் தார். கோவை மாவட்டம், மதுக்கரை பகு தியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் பொள்ளாச்சி மெயின் ரோடு, சுந்தரா புரம் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகே வாடகைக்கு கடையை எடுத்து பேக்கரி ஒன்றினை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு மாத வாடகையாக ரூ.25 ஆயிரம் கொடுத்து வருகிறார். இச்சூழலில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 4 மாதங் களாக பேக்கரியை திறக்கவில்லை. ஆனால், கடையின் உரிமையாளர் சண்முகசுந்தரராஜ் அடிக்கடி கடைக்கு வாடகை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலை யிலும் நாகராஜ் கடன் வாங்கி ரூ.38 ஆயிரத்தை அளித்துள்ளார்.

 இந்நிலை யில் கடந்த ஆக. 29 ஆம் தேதி யன்று இரவு மீதி வாடகை தொகையைக் கேட்டு கட்டிட உரிமையாளர் சண்முகசுந்தர ராஜ், அவரது மனைவி மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் நாகராஜூடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின் கடைக்குள் அத்துமீறி நுழைந்து ஆயுதங்களைக் கொண்டு நாகராஜை தாக்கியுள்ளனர். மேலும் கடையி லுள்ள பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியதுடன், காசோலைக ளையும் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் போத்தனூர் காவல்துறையினர் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால், முறையான விசாரணை நடை பெறாததால் வியாழனன்று பாதிக்கப் பட்ட நாகராஜ், தனது மனைவியுடன் வந்து கோவை மாநகர காவல் ஆணை யரிடம் புகார் அளித்தார்.