tamilnadu

டாஸ்மாக் கடை மூடல் - மக்கள் நன்றி

திருப்பூர், செப். 11 – திருப்பூர் அங்கேரி பாளையம் சாலை சிங்கார வேலன் நகரில் செயல்பட்டு  வந்த டாஸ்மாக் மதுபானக்  கடை (எண் 1985) மற்றும்  பார் இரண்டும் மூடப்பட் டது. பொது மக்கள், பல் வேறு அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியான வலிமை யான போராட்டத்தின் காரணமாக இந்த கடையை மூடுவதற்கு மாவட்ட நிர்வா கம் உத்தரவிட்டது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இந்த  உத்தரவினால் மகிழ்ச்சி யும், அமைதியும் பெற்றி ருப்பதாக தெரிவித்தனர். எனவே இந்த கடையை மூடு வதற்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனைத்து அரசியல் கட்சி  பிரதிநிதிகள், குடியிருப் போர் சங்கத்தினர், பொது மக்கள் வெள்ளியன்று நேரில் ஆட்சியரகத்துக்கு வந்து நன்றி தெரிவித்தனர்.