tamilnadu

கோவை: தொண்டையில் இறைச்சித் துண்டு சிக்கி சிறுவன் பலி

கோவை, ஆக. 1- கோவையில் இறைச்சித் துண்டு தொண்டையில் சிக்கியதால் நான்கு வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் மல்லிகா நகர் பகுதியில் வசித்து வருபவர் காமாட்சி(30). இவ ரது மனைவி பின்கி(28).

இவர்களுக்கு நான்கு வய தில் கபிலேஷ் என்ற மகன் உள்ளான். இந்நிலையில், கணவன் மனைவி இருவருக்கிடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டு, மனைவி தனது 4 வயது குழந்தை கபி லேஷ் உடன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வட வள்ளியில் வசித்து வந்தார். இந்த நிலையில் புத னன்று வீட்டில் இறைச்சி எடுத்து சமைத்து சாப்பிட் டுள்ளனர்.
அப்போது குழந்தை கபிலேஷுக்கு இறைச்சித் துண்டு தொண்டையில் சிக்கி மூச்சுத் திண றல் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

 இதனையடுத்து கோவை அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறுவன் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும்,  உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வடவள்ளி காவல் நிலையத்தில் காமாட்சி புகார் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் பிரேதப்  பரிசோதனை முடிந்து குழந்தையின் உடலை காமாட் சியிடம் ஒப்படைத்தனர். சிறுவன் உயிரிழந்த சம்ப வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.