கோவை, அக்.8– கொடுபடாத சம்பளமாக உள்ள பண்டிகை கால போனஸ் வழங்குவதில் தொழில் நிறுவ னங்கள் தாமதம் செய்வது தொடர்பாக தமிழக அரசு மற்றும் தொழிலாளர் நலத்துறை தலை யிட வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) கோவை மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, கோவையில் பஞ்சாலை கள், இன்ஜினியரிங், கட்டுமான நிறுவனங்கள், விசைத்தறி, தேயிலை தோட்டங்கள் உள் ளிட்ட தனியார் நிறுவனங் களிலும், போக்குவரத்து, மின் சாரம், குடிநீர், சிவில் சப்ளையர் கார்ப்பரேசன், ஆவின், டாஸ்மாக், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு துறை நிறுவனங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி, பட்டு வளர்ச்சி உள்ளிட்ட நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், வணிக நிறுவ னங்கள், சேவை துறை நிறு வனங்களில் லட்சக்கணக்கா னோர் பணியாற்றி வருகின்றனர். மேலும், நிரந்தர தொழிலா ளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என இவர்கள் ஆண்டு முழுவதும் அயராது உழைத்து உற்பத்தி செய்து நிறுவனத்திற்கு லாபத்தை உருவாக்கி உள்ளனர். இத்தகைய தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங் கப்படும் போனஸ் பணத்திற்காக தொழிலாளர்கள் காத்துக் கொண் டிருக்கிறார்கள். மத்திய, மாநில அரசின் கொள்கைகளால் நுகர் பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கை செலவுகளுக்கு போதிய வருமானமின்றி சிரமப்படும் நிலையில் இத்தொழிலாளர்க ளுக்கு போனஸ் மட்டுமே நிவாரணமாக உள்ளது. இந்நிலையில் போனஸ் குறித்து இதுவரை தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக் கூட துவக்காதது ஏற்புடையதல்ல. எனவே அரசும், தொழிலாளர் துறையும் உரிய முறையில் தலையீடு செய்ய வேண்டும் என சிஐடியு கேட்டுக்கொள்கிறது. மேலும் தீபாவளி பண்டிகைக்கு பத்து தினங்களுக்கு முன்பாக போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் களுக்கான போனஸ் கோரிக் கையை வலியுறுத்தி சிஐடியு சார்பில் அக்டோபர் 17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என சிஐடியு மாவட்டக்குழு முடி வெடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.