tamilnadu

வாழ்வாதாரம் இழந்த ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கிடுக சிஐடியு கோரிக்கை

கோவை, மார்ச் 24- கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து ஓட்டு நர்களுக்கு போர்கால அடிப்படையில் பாதுகாப்பு உபக ரணங்கள் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் என கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சிஐடியு கோவை மாவட்ட சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எம். ரபீக் தெரிவித்துள்ளதாவது, உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) எனும் உயிர்கொல்லி கிருமியால் உலகெங்கும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவ தும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையி லும், தங்களது சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்ற னர். எல்லா வகையிலும் போர்கால அடிப்படையில் நோய் தடுப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் ஏற்படுத்தி வரு கிறது. மறுபுறம் பொருளாதார வீழ்ச்சியும், வேலை வாய்ப் பினை இழக்கவும், அத்தியாவசிய பொருட்கள் பஞ்சம் ஏற்ப டவும், விலை அதிகரிக்கும் நிலை உருவாகி வருகிறது.  இந்நிலையில், ஆட்டோ, டாக்சி இரவு நேரங்களில் இயங்க கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியும், வெளி மாநிலங்க ளுக்கு கனரக வாகனங்கள் செல்ல முடியாததாலும், சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டதாலும், இலகுரக வாகனங்கள் வெளி மாவட்டங்கள் ஏதும் செல்ல முடியாத நிலையில் வாடகை ஏதும் இல்லாமல் முற்றிலும் முடங்கி உள்ளது. இத னால், கோவை மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் தொழில் மற்றும் வாழ்வாதாரங்களை இழந் துள்ளனர். எனவே, உயிரை பணயம் வைத்து பணியாற்றக் கூடிய வாகன ஓட்டுநர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் போர்கால அடிப்படையில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண் டும் என தெரிவித்துள்ளார்.