tamilnadu

வால்பாறை அரசு எஸ்டேட்டில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடுக  சிஐடியு மனு

பொள்ளாச்சி, மார்ச் 19- பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சின்கோனா பகுதி யில் அரசு ‘டான் டீ’ எஸ்டேட்டில் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடக்கோரி, வால்பாறை தேயிலைத் தோட் டத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் (சிஐடியு) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுகுறித்து தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் கோவை மாவட்டப் பொதுச் செயலாளர் பி.பரமசிவம் கூறுகையில்: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சின் கோனா அரசு ’டான் டீ’ எஸ்டேட்டில் 100 க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.  இப்பகுதியில் கோடை காலங் களில் குடிநீர் வறட்சி வருடா வருடம் ஏற்படுகிறது. இதனை சரிபடுத்த இப்பகுதியில் ஆள்துளைக் கிணறு அமைக்கக் கோரி, பல முறை நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவ டிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுதொடர்பாக உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென, புத னன்று பொள்ளாச்சி சார் ஆட்சியருக்கு புகார் மனு அளிக் கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.