districts

img

பெரம்பலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சிஐடியு மனு

பெரம்பலூர், ஏப்.11 - பெரம்பலூர் நகராட்சி அவசரக் குழு  கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே  உள்ள நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில்  திங்களன்று நடைபெற்றது. நகராட்சி தலைவர்  அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்திற்கு, நகராட்சி ஆணையர் குமரிமன்னன் துணைத்தலைவர் ஹரி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அப்போது, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும்  ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.  அம்மனுவில், தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஊதியத்தில் பிஎப் திட்டத்திற்காக மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு வரும் தொகை முறை யாக உரியவரின் கணக்கில் வரவு வைக்கப்படு வதில்லை. எனவே உரியவரின் கணக்கில் வரவு வைக்க வேண்டும். மேலும் பெரம்ப லூர் நகராட்சியில் துப்புரவு பணி செய்யும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை மீது தீர்வு காண்பதில், தொடர்ந்து மெத்தன போக்கை நகராட்சி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக கடைப் பிடித்து வருகிறது.  தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலிக் கான ஊதியத்தை நிலுவைத்தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும். ஒவ்வொரு தொழி லாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த  தொகைக்கான விபரங்களை மாத வாரியாக வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தொ டர்ந்து பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திட கருத்துருவை தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகம் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரம்பலூர் நகராட்சியில் உள்ள மக்கள்  தொகைக்கு ஏற்ப தூய்மை பணியாளர்களை நியமித்திட வேண்டும். தொழிலாளர் தினமான  மே தினத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.