tamilnadu

img

துப்புரவுப்பணியை காண்ட்ராக்ட் விடக்கூடாது: நெல்லை மாநகராட்சி ஆணையரிடம் சிஐடியு மனு

திருநெல்வேலி ஜுலை 18- நெல்லை மாநகராட்சியில் பணிபுரியும் சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்க ளுக்கான கோரிக்கைகள் குறித்து சிஐடியு சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்கப் பட்டது.  சந்திப்பின்போது சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் ஆணையரிடம் கூறுகை யில், தொழிலாளர்கள் தற்போது குப்பைகளை பிரிக்கும் போது கொரோனா தொற்று வருவ தற்கான வாய்ப்புள்ளது. எனவே கொரோனா தொற்று காலம் முடியும் வரை குப்பைகளை பிரிக்கும் பணியை தொழி லாளர்களை செய்ய கூறுதல் வேண்டாம் என்றார்.  அதற்கு  ஒரு நோட்டீஸ் போட்டு அடுத்த வாரம் முதல் பிளாஸ்டிக்கை ஏதாவது ஒரு நாள் மட்டும் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம். மக்கள் மத்தியில் இதை கூறுவ தற்காக தனியாக ஒரு நோட்டீஸ் வெளியிட்டு மக்களிடத்தில் விநி யோகிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று மாநகராட்சி ஆணை யாளர் கூறினார். மேலும்  பத்து நாட்களுக்கு முன்பாக  தூய்மைப்பணி தொழி லாளர்களுக்கு பிடித்தம் செய் யப்பட்ட ஈபிஎப் பணத்தை முழு மையாக ஈபிஎப் அலுவலகத்தில் செலுத்தாமல் உள்ளது .

உடனே  செலுத்த வேண்டும் என்றார்.   பணம் முழுவதும் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்துவதற்கான ஏற்பாடு கள் துரிதமாக செய்துகொண்டி ருப்பதாகவும்    இந்த மாத இறு திக்குள்ளாக அதற்கான முழு மையான ஏற்பாடுகளை செய்து முடித்து விடுவேன் என்று ஆணையர்  உறுதியளித்தார். அனைத்து தொழிலாளர்க ளுக்கும் இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்பட வேண்டும். இந்த தொழிலில்  காண்ட்ராக்ட் முறையில் பணி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக அறிகிறோம். துப்புரவு பணியை செய்வதற்கு காண்ட்ராக்ட் விடக்கூடாது .சுய உதவிக்குழு மூலமே பணி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அனைத்து தொழிலாளர்க ளுக்கும் அடுத்த மாதம் முதல் இஎஸ்ஐ பிடித்தம் செய்வ தற்கான ஏற்பாடுகளை செய்து விடுவேன் . இதுவரையிலும் காண்ட்ராக்ட் விடுவற்கான எந்த ஏற்பாடும் திருநெல்வேலி மாந கராட்சியில் ஏற்படுத்தப்பட வில்லை ஆனால் புதிதாக 250 தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கப் போகிறோம் என்று ஆணையர் கூறினார்.