tamilnadu

img

கோவையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த பெண் கடத்தல்

கோவை, ஜூன் 20– கோவை இடையர்பாளையம் பகுதியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

 கோவை மாவட்டம், வடவள்ளி சாலை, இடையர்பாளையம்  வித்யா காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் கார்த்திகேயன் (35) என்பவரும்,  திருச்சி மாவட்டம்,  சஞ்சீவி நகர், நேரு வீதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகள் சக்தி  தமிழினி பிரபா (25) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர் கள் என்பதால் இவர்களது காத லுக்கு அப்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத னையடுத்து பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து கார்த்திகேயன் மற்றும் தமிழினி பிரபா கடந்த ஜூன் 5 ஆம் தேதியன்று சுயமரியாதைத்  திருமணம் செய்து கொண்டனர்.

மேலும், கோவை மாவட்ட பதிவா ளர் அலுவலகத்தில் முறையாக திருமணத்தை பதிவும் செய்துள்ள னர்.  இந்த திருமண தகவல்கள் முறை யாக இரண்டு வீட்டு பெற்றோருக் கும் தெரிவித்ததில், பெண்ணின் பெற்றோர் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று தெரி வித்து விட்டனர்.  ஆனால், கார்த்தி கேயனின் பெற்றோர்  திருமணத் திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வடவள்ளி சாலை, இடையர்பாளையத்தில் கார்த்தி கேயனின் வீட்டில் வசித்து வந்த  நிலையில், வெள்ளியன்று பெண் ணின் பெற்றோர் மற்றும் உறவினர் கள் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தாயாரை தாக்கிவிட்டு பெண்ணை திருச்சிக்குக் காரில் கடத்திச் சென்ற தாகக் கூறப்படுகிறது.  

இந்த திடீர் தாக்குதலில் படுகாய மடைந்த கார்த்திகேயனின் தாயார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் தொடர்பாக கார்த்தி கேயனின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனது.

இதுகுறித்து கார்த்திகேயனின் உறவினர்கள் கூறுகையில், வெவ் வேறு சாதி என்பதால் திருமணத் திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், காதலித்த இருவரும் திரும ணத்தில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைத்தோம். தற்போது பெண்ணின் உறவினர் கள் காவல்துறையின் உயர் பொறுப் பில் இருப்பதால், வீடு புகுந்து தாக்கி  பெண்ணை கடத்திச் சென்றுள்ள னர்.

மேலும், பெண்ணை ஆணவப் படுகொலை செய்துவிடுவார்களோ என்கிற அச்சம் எங்களுக்கு உள்ளது. ஆகவே, கடத்திச் சென்றப் பெண்ணை மீட்கவும், கடத்தலில் ஈடுபட்ட அவரின் பெற்றோரைக் கைது செய்யவும், உரிய நடவடிக் கையும்  எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.