எவ்வித அறிவியல் பூர்வமான நட வடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் ”கொரோனாவின் பிடியிலிருந்து வெளியே வருவோம்” என வெறும் கைகளில் முழம் போட்டுவிட்டு ஊரடங்கைத் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது மத்திய அரசு. உண்மையில், இந்த ஊரடங்கு காலத் தில் மக்களுக்குத் தேவையான எவ்வித நிவா ரணங்களையும் வழங்காமல் மக்களை அவ ரவர் தொழிலுக்கு, அன்றாட பணிகளுக்கு மீண்டும் அனுமதிப்பதையே மிகப்பெரிய சாதனையாகவும், நிவாரணமாகவும் தளர்வு களை பிரபலப்படுத்தி வருகிறது மத்திய, மாநில அரசுகள்.
இதற்கு மிகச்சிறந்த உதார ணமே ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர் கள் மீண்டும் அவர்களின் தொழிலுக்கு அனு மதித்ததை பெருமையாகச் சொல்லும் நடவ டிக்கை. முன்னதாக, தமிழகத்தில் மட்டும் மொத் தம் 2.85 லட்சம் ஆட்டோ ரிக்சாக்கள் உட்பட 13 லட்சம் பதிவு செய்யப்பட்ட பொதுப் போக் குவரத்து வாகனங்கள் உள்ளன. அவற்றின் ஓட்டுநர்கள் அனைவரும் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள். ஆனால், 45 ஆயிரம் ஆட்டோ ரிக்சா ஓட்டு நர்கள் உட்பட வெறும் 83 ஆயிரத்து 500 பேர் மட்டுமே இதுவரை நலவாரியத்தில் தங்க ளைப் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் கூட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் தங்கள் உறுப்பினர் பதிவுகளை புதுப்பிக்க தவறிவிட்டனர். இதன்படி பார்த்தால், அரசு அறிவித்த கொஞ்ச, நஞ்ச நிவாரணம் கிடைக் கப் பெற்றவர்கள் வெறும் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே ஆவர். இத்தகைய சூழலில் ஆட்டோ, மினி டோர் போன்ற பொது போக்குவரத்து வாக னங்களை இயக்கி வரும் ஓட்டுநர்கள் சில ரிடம் பேசுகையில் அவர்கள் கொட்டிய குமு றல்கள் வருமாறு,
இருப்பதையும் பிடுங்குவதா...
6 வருடங்களாக ஆட்டோ ஓட்டிவரும் சஞ்சீவ் என்பவர் கூறுகையில், நலவாரி யத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான். முதலில் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கே ஆயிரத் தெட்டு வழிமுறைகள் உள்ளன. உண்மை யில், இது இருந்தால் அது வேண்டும், அது இருந்தால் இது வேண்டும் என அழைக்கழிக் கத்தான் செய்கின்றனர். இது ஒருபுறம் இருக் கையில், மறுபுறம் இருப்பதைப் பிடுங்கும் முயற்சியில் வங்கிகள் உள்ளன. என் ஆட் டோவிற்கு 40 தவணை கட்ட வேண்டிய நிலையில், தவணை தள்ளி வைப்பின் கார ணமாக 7 தவணையை சேர்த்துக்கட்ட வேண்டுமென தினமும் வங்கி நிர்வாகி மிரட்டி வருகிறார்.
மேலும், சாப்பாட்டிற்காக ஆட்டோவை எடுத்து வெளியே வந்தாலும் அதுதான் ஆட்டோ எடுத்து விட்டீர்களே, 2 மாத வாட கையைக் கொடுங்கள் என்கிறார் வீட்டு உரி மையாளர். வெறும் அரிசி, பருப்பு, எண்ணெ யைக் கொடுத்து விட்டு சமைத்து சாப்பிடு என் கிறது அரசு. இந்த அரிசி மற்றும் எண்ணெயை மட்டும் வைத்து எவ்வாறு சமைப்பது? அருகே இருக்கும் கேரள அரசு 20 பொருட் களுடன் கூடிய தொகுப்பினை வழங்கி யுள்ளது. அதையாவது நம் அரசு பின்பற்றியி ருக்கலாம். இவ்வாறு அரசின் வெற்று அறி விப்புகள் அனைத்தும் உண்மையில் வெளுத் துப்போய்தான் உள்ளன என்கிறார் சஞ்சீவ்.
தடை நீக்கியும் பயனில்லை...
மினிடோர் ஆட்டோவின் மூலம் கம்பெ னிகள் மற்றும் தேவைப்படும் இடங்களில் பொருட்களை ஏற்றி இறக்கி வருமானம் தேடிக் கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவர் பேசுகையில், கம்பெனிகள் மற்றும் கல்யா ணம் போன்ற சுபநிகழ்ச்சி சீசன்களே எங்கள் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகள். தற்போது ஊரடங்கு அறிவிப்பால் இரண் டுமே தடைபட்டுள்ளதால் வீடுகளிலேயே அடைபட்டு உள்ளோம். இதனால் தற் போது தடை நீக்கப்பட்டாலும் எங்களுக்கு ஒரு பயனும் இல்லை. அரசு 3 மாதத் தவ ணைகளை தள்ளி வைக்க வேண்டுமென வங்கி நிர்வாகங்களை கேட்டுக்கொண்டுள் ளது.
ஆனால் 3 மாதம் கழித்து மட்டும் எப் படி எங்களால் ஒட்டுமொத்தமாகக் கட்ட முடி யும்?. நான் இப்போது தவணை கட்டுவ தற்காக என் மனைவி நகையை அடகு வைக் கப் போகிற வழியில் தான் நீங்கள் என்னை சந்தித்திருக்கிறீர்கள். அடுத்து மெட்ரிகு லேசன் பள்ளியில் படித்து வரும் என் மக ளுக்கு பள்ளிக்கட்டணம் அறிவித்தால் மொத் தமாக மாட்டிக் கொள்வேன். மற்றபடி அரசு அறிவித்த எந்தவொரு நிவாரண அறிவிப்பும் வெறும் வெற்று அறிவிப்பு மட்டுமே. இதை நான் நேரிடையாக அரசிடம் கூறினாலும், உங்கள் மூலமாக அரசிடம் கூறினாலும் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. இவ்வாறு தன் விரக்தியை பகிர்ந்து கொண்டார்.
அவசரத்தை கைவிட்டு.. ஆக்கப்பூர்வமாக முடிவெடு...
இரண்டு மாதத்திற்கு முன்பு தான் தவணை கட்டமுடியாமல் என் ஆட்டோ ஜப்தியானது. அதன்பின் ஓலா ஆட்டோவில் வாடகைக்குத் தான் பணிபுரிந்து வந்தி ருந்தேன். கொரோனா ஊரடங்கால் அதுவும் பாழ்பட்டது, என சொல்கிறார் ஆட்டோ ஓட்டுநரான ரவிக்குமார். மேலும் அவர் கூறு கையில், கைவாடகையை (செல்லும் வழி யில் கைகாட்டி வாடகை கேட்பது) மட்டும் நம்பியுள்ள என்னைப் போன்றோருக்கு ஒரு வண்டியில் இருவர் மட்டுமே செல்ல வேண்டு மேன விதி கொண்டு வந்திருப்பது, உண்மை யில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத் இல்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் இயக்கப் பட்ட பேருந்துகளில் தொலைக்காட்சியில் காட்டுவது போல் தனிமனித விலகலெல் லாம் உண்மையில் கடைபிடிக்கப்படுவது இல்லை. இந்நிலையில் பெற்றோருடன் ஒரு மகன் வருகையில் இருவரை மட்டும் தான் ஏற்றிச்செல்ல வேண்டுமென நான் சொன் னால் மீதி ஒருவர் எதிலே வருவார்?
இதேபோல் அரசு அளித்த ஆயிரம் ரூபாய் நிவாரணமெல்லாம் எந்த மூலைக்குப் பத்து மென அரசு நினைத்ததோ எனக்குத் தெரிய வில்லை. அதன்மூலம் குடும்பத்திற்கு அரை வயிற்றை கூட நிரப்ப முடியாது. மேலும் என் வீட்டு உரிமையாளர் ஒரு விதவையாவார். அரசு வீட்டு வாடகை வசூலிப்பதை சற்று நிறுத்தி வைக்க வேண்டுமென அறிவுறுத் தினாலும், அதை மட்டுமே நம்பியுள்ள என் வீட்டு உரிமையாளர் போன்றோர் என்ன செய்வார்கள் என அரசு சிந்தித்ததாகத் தெரி யவில்லை. ஆகவே அவசரமான முடிவுகள் எடுப்பதை அரசு தவிர்த்து விட்டு ஆக்கப் பூர்வமாக முடிவுகளை அரசு எடுக்க வேண் டுமேன நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மிரட்டும் வங்கிகள்...
தான் ஓட்டி வரும் மினிடோரின் மூலம் 7 பேர் கொண்ட தனது குடும்பத்தை காப் பாற்றி வரும் ஜெயக்குமார் என்பவர் கூறுகை யில், கடந்த முப்பது வருடங்களாக இத் தொழில் செய்து வருகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள நிலை போல் இதற்கு முன் ஏற்பட்டதே இல்லை. ஆட்டோ ஓட்டுபவர்க ளுக்குத்தான் கஷ்டம், என்னைப்போல் மினி டோர் ஓட்டுபவர்கள் காய்கறி வண்டி மற்றும் சரக்குகள் ஏற்றி பிழைத்துக் கொள்வார்கள் என ஒரு மாய பிம்பம் உள்ளது. ஓரளவு ஏற் றுக்கொள்ளப்பட்டாலும் அது முற்றிலும் உண்மையல்ல. அனைவரும் அதையே நம் பும்போது வாய்ப்புப் போட்டி அதிகரிப்பால் ஒரு சிலருக்கே அது பலனளிக்கும் என்பதே உண்மையாகும். வண்டிக்குத் தவணை கட்டிவரும் நான் ஒரு மாதத்திற்கு 12 ஆயி ரம் கட்டிவந்த நிலையில் 3 மாதக் கடன் தள்ளி வைப்பால் வட்டியோடு மொத்தமாக ஒரே தவணையில் ரூ.50 ஆயிரம் கட்டச்சொல்லி வங்கி நிர்வாகியால் நிர்பந்திக்கப்பட்டு வரு கிறேன். வண்டியை ஜப்தி செய்து கொண்டு போனால் வேறு ஓட்டுநர் வேலைக்குத்தான் நான் செல்ல வேண்டும், எனக் குமுறுகிறார்.
சாப்பாட்டிற்கே வழியில்லா நிலை
காலையிலிருந்து ஸ்டேண்டிலேயே இருந்தாலும் கிடைப்பது என்னவோ நூறோ, இருநூறோ தான் என ஆரம்பிக்கிறார் மினி டோர் ஓட்டிவரும் அசோக். கொரோனா விற்கு முன் ஒரு நாளைக்கு 500 முதல் 800 ரூபாய் வரை சம்பாதித்து வந்த நான், கடந்த சில நாட்களாக கொரோனாவின் ஊரடங் கால் குடும்பத்திற்கான சாப்பாட்டிற்கே அல் லாடி வருகிறேன். முன்னெல்லாம் வடநாட் டுக்காரர்கள் அதிகமாக கம்பெனிகளில் வேலை செய்து வந்ததால் கம்பெனிகனில் எப்போதும் உற்பத்தி சரக்குகள் ஏற்றும் வேலை இருந்து வந்தது. இப்போது அது வும் இல்லாத காரணத்தால் தின வாட கையை நம்பியே பிழைப்பு ஓடுகிறது. என்மகன் அரசுப்பள்ளியில் படிப்ப தால், பள்ளிக் கட்டணத் தொல்லை இல்லை. இருப்பினும் வண்டித் தவணை ஒட்டு மொத்தமாகக் கட்டும் சுமையும், வீட்டு வாட கையும் தான் பெரும் பிரச்சினையாக உள் ளது.
நலவாரியத்தில் நான் பதிவு செய்ய வில்லை, பதிவு செய்தோருக்கும் அரசு நிவா ரணம் வழங்கவில்லை. அறிவிப்புகளை மட்டும் வேகமாக அறிவிக்கும் அரசு எங்க ளைப்பற்றி உண்மையில் கவலைப்பட் டதாகத் தெரியவில்லை, அவ்வாறு அவர் கூறினார். இவ்வாறு ஓட்டுநர்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாப்பதில் உண்மையில் ஆளும் அரசுகள் தோற்றுப்போய் தான் நிற்கிறது என்பதையே இவர்களின் குரல் பிரதிபலிக் கிறது. அதேநேரம், இவர்களின் ஒட்டு மொத்த கோரிக்கைகளாக குறிப்பிடுவது, நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், செய் யாதவர்கள் என எவ்வித பாகுபாடின்றி அனைத்து ஓட்டுநர்களுக்கும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் ரூபாயாவது நிவாரண உதவி அளிக்க வேண்டும். ஆட்டோ தவ ணையை தள்ளி வைப்பதற்கு பதில் தள்ளு படி செய்ய வேண்டும் என்பதே. அந்த குறைந்தபட்ச சுமையையாவது தங்களிட மிருந்து அரசு இறக்கி வைக்க வேண்டு மென்தே அத்தொழிலாளர்களின் எதிர் பார்ப்பு.
-ச.காவியா.