கோவை, செப். 24– தேர்வு கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் செவ்வாயன்று கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள் ளது. இதனை கண்டித்து பல்கலைக்கழத் திற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவை அரசு கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் செவ் வாயன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். கோவை அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும். மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அசாரூதீன் நிர்வாகி கள் வினித், நர்மதா மற்றும் கல்லூரி மாண வர்கள் பலர் பங்கேற்றனர்.