tamilnadu

img

அரசியல் இயக்கங்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்திடுக சிபிஐ, சிபிஎம் கட்சிகள் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 6- திமுக உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் மீது போடப்படும் பொய் வழக்களை திரும்பப் பெற வேண்டும் என கோவையில் இடது சாரி கட்சியினர் ஒன்றினைந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை சந்தித்து மனுக்களை அளித்தனர்.

இதுதொடர்பாக, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமுகம் மற்றும் சிவசாமி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோரிடம் வெள்ளி யன்று அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, உலகையே உலுக்கி வரும் இந்த கொரோனா நோய் தொற்றை தடுக்க  பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது.

தமிழக அரசும் தீவிர நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக் கின்றன. தற்சமயம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு அசாதாரணமான சூழல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆளும் கட்சியின் குறைபாடுகளை சுட்டிக் காட்டினால் கைது என்கிற நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. அன்றாடம் உள்ள சமூகப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு குரலெழுப்பும் எதிர்க் கட்சியினரின் குரலை ஒடுக்கும் விதமாக இந்த கைது நடவடிக்கை உள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத் தில் திமுக மாவட்டச் செயலாளர் உள்ளிட்டவர்களையும்,  கம்யூ னிஸ்ட் கட்சியினரையும் காழ்ப் புணர்ச்சியோடு காவல்துறை கைது செய்து வருகிறது. இத் தகைய நடவடிக்கைகளை இடது சாரி கட்சிகள் ஒருபோதும் ஏற் காது.

ஜனநாயக நாட்டில் விமர்சனங்களை முன்வைப் வவர்களை  கைது செய்யும் நட வடிக்கை  ஜனநாயகத்திற்கு எதி ரானது. ஆகவே, கைது செய்த அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், அரசு மற்றும் அரசு அதிகாரிகள் தற் போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதில் கவனம் செலுத்தி பணி யாற்ற முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித் துள்ளனர்.