tamilnadu

படியூர் வாக்குச்சாவடியில் பூத் ஏஜென்டுகள் வாக்குவாதம்

திருப்பூர், டிச. 27 - காங்கயம் ஒன்றியம், படியூர் அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் மாற்றுத் திறனாளி வாக்காளருக்கு உதவுவதாக கூறி இரு கட்சிகளைச் சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், படியூர் அரசு பள்ளி வாக்குச் சாவடி யில் வெள்ளியன்று வாக்குப்பதிவின்போது, மாற்றுத் திறனாளி முதியவர் ஒருவர் வாக்களிப்பதற்காக வந்தார். அவரைப் பார்த்தவுடன் அங்கிருந்த அதிமுகவைச் சேர்ந்த பூத் ஏஜென்ட் எழுந்து சென்று அவருக்கு உதவுவது போல உள்ளே அழைத்து வர முயன்றார். வாக்குச்சாவடி அலுவலர்கள் உதவிக்கு இருக்கும் நிலையில், அதிமுக ஏஜென்டின் செயலுக்கு திமுக ஏஜென்ட் எதிர்ப்புத் தெரி வித்தார். இதனால் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலை யில் வாக்குச்சாவடி மையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அங்கு வந்து இரு தரப்பினரை யும் அமைதிப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் வாக்குப் பதிவுக்கு இடையூறு ஏற்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.