ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, அம்மாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கணேசபுதூர், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடம் சென்றாலும், மருத்துவமனை சென்றாலும், வேலைக்கு சென்றாலும் கோபி அல்லது அத்தாணி பகுதிக்கு செல்ல வேண்டும். அத்தாணிக்குச் செல்ல பவானி ஆற்றைக் கடக்க வேண்டும். இதனை கடக்க அப்பகுதிமக்கள் அனைவரும் பரிசலில் சென்று வருகிறார்கள். இவ்வாறு 50 ஆண்டுகளுக்கு மேலாகஆற்றைக் கடந்து வரும் மக்கள்பவானி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும்என கோரி வருகின்றனர். ஆனால்,இன்று வரை எந்த அரசும்,அதிகாரிகளும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என குறை கூறியுள்ளனர். அம்மாபாளையம் பகுதியானது அந்தியூர் சட்டன்ற தொகுதிக்கு உட்பட்டும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.மேலும், பாலம் அமைக்ககேட்டு ஊராட்சி செயல் அலுவலர், கோபி வட்டாட்சியர், கோட்டாட்சியர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கல்வித்துறை அமைச்சருமான செங்கோட்டையன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சத்தியபாமா உள்ளிட்டோரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தநடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆற்றை கடக்க மேம்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.இதற்கிடையில் வட்டாட்சியர் விஜயகுமார் கூறுகையில், பவானி ஆற்றில் பாலம் கட்டவேண்டும் என அப்பகுதி மக்கள்கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கை பொதுப்பணித்துறை அதிகாரிகளை சேர்ந்ததாகும். பட்டா உள்ள பகுதியில்பாலம் அமைக்க வேண்டுமென்றால் மட்டுமே எங்களுக்கு தகவல் வரும். ஆற்றில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக எங்களுக்கு எந்த மனுவும், தகவலும் வரவில்லை என்று கூறினார். இது குறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கோபி தாலுகா செயலாளர் வி.ஆர்.மாணிக்கம் கூறுகையில், இரவு நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டுமானாலும் கூட 10 கி.மீ சுற்றி மேவாணிஅடைந்து கீழ்வாணி வழியாக அத்தாணியை அடைய வேண்டும்.அதே போல், கோபி அரசு மருத்துவமனையை அடைய சுமார் 20 கி.மீ சுற்றி வர வேண்டியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அப்பகுதி மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு விரைவாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். மனு கொடுத்தாலும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும் கேளாக் காதில் ஊதிய சங்காகவே உள்ளது என ஆவேசமாக கூறினார்.