மயிலாடுதுறை, மே 14 - மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட 4 ஆவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நகர பூங்காவில் ஆர்.கமலநாதன் தலைமை யில், முன்னாள் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் துவக்கி வைத்த பேரணி, மாற்றுத்திறனாளிகளின் கோரிக் கைகளை முழங்கியவாறு விஜயா திரை யரங்கு அருகில் நிறைவடைந்தது. மாவட்டச் செயலாளர் டி.கணேசன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வட்டத்தலைவர் ராஜேந்தி ரன் வரவேற்று பேசினார். மாநில தலைவரும், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினருமான பா.ஜான்சி ராணி, மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநிலச் செயலாளர் பி.ஜீவா ஆகியோர் உரையாற்றினர். பிரதிநிதிகள் மாநாட்டிற்கு முன்ன தாக மாவட்டத்துணை தலைவர் சபா. அருள்மணி சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் ஜானகி ராஜா துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் டி.கணேசன் வேலை அறிக்கையையும், வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ஆர்.தாமரைச்செல்வியும் வாசித்த னர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர். ரவீந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் வி.சீனிவாசன், விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி. ஸ்டாலின், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் வ.பழனிவேலு உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வங்கிகளிலும், நிபந்தனையற்ற சுய தொழிற்கடன் மற்றும் கல்விக் கடன் வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அலுவலகங்களில் சாய்வுதளம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.