சென்னை, செப்.25 - தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சிஐடியு தென்சென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. சிஐடியு தென்சென்னை மாவட்ட 15வது மாநாடு செப்.24-25 தேதிகளில் தோழர்கள் இ.தினமணி, எம். பாண்டியன் நினைவரங்கில் (தாம்பரம்) நடைபெற்றது. இந்த மாநாட்டில், அரசு மற்றும் பொதுத் துறைகளில் காலியாக உள்ள 7 லட்சம் பணி யிடங்களை நிரப்ப வேண்டும், பெண்கள் பணி புரியும் இடங்களில் குழந்தை காப்பகமும், பாலி யல் புகார் குழுக்களும் அமைக்க வேண்டும், தமிழக அரசே ஆட்டோ ஆப் ஒன்றை உருவாக்கி செயல்படுத்த வேண்டும், நலவாரிய செயல்பாட்டை முறைப்படுத்துவதோடு, பணம் பயன்களை கால தாமதமின்றி வழங்க வேண்டும். சுமைப்பணி, தையல் தொழிலாளர்களுக்கு தனித்தனி நலவாரியம் அமைக்க வேண்டும், தா ம்பரத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும், டாஸ்மாக் ஊழி யர்களை அரசு ஊழி யராக்க வேண்டும், தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளில் தூய்மைப்பணியை தனி யாருக்கு கொடுக்க கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த மாநாட்டை வாழ்த்தி மூத்த தொழிற் சங்கத் தலைவர் டி.கே.ரங்க ராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் சி.திரு வேட்டை (மத்திய சென்னை), எஸ்.லெனின் சுந்தர் (வடசென்னை) ஆகி யோர் பேசினர். மாநில துணைப் பொதுச் செய லாளர் எஸ்.கண்ணன் நிறை வுரையாற்றினார். மாவட்ட துணைச்செயலாளர் ஏ.நடராஜன் நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவராக இ.பொன்முடி, செயலாளராக பா.பால கிருஷ்ணன், பொரு ளாள ராக ஏ.நடராஜன் ஆகியோர் பேசினர் செய்யப்பட்டனர்.