கோவை, ஜூலை 19- கோவை உக்கடம் அருகே வியாபாரி போல் நடித்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை உக்கடம் அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் நிஜாம். பிளக்ஸ் டிசைன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந் நிலையில், வெள்ளியன்று இரவு நிஜாம் வீட்டின் அருகே புர்கா ஆடை விற்பனை செய்ய மர்மநபர் ஒருவர் வந்துள் ளார்.
இந்நிலையில், நிஜாமின் மனைவியிடம் வியாபாரம் செய்வது போல் பேச்சு கொடுத்த அந்த நபர் திடீரென கழுத் தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக்கொண்ட அப்பெண் சத்தம் போட்டதையடுத்து மர்ம நபர், தான் வைத்திருந்த ஆயுதத் தால் பெண்ணை தாக்கி அங்கிருந்து தப்பியுள்ளார்.
இத னைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த அப் பெண்ணை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக உக்க டம் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.