tamilnadu

img

பாத்திமா லத்தீப் விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்க!

காவல்துறை தலைவரிடம் எஸ்எப்ஐ மனு

சென்னை, நவ. 21- சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அலுவ லகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி. இங்கு, இம்  மாதம் 9 ஆம் தேதி முதுகலை முத லாமாண்டு மனிதவியல் துறை படித்த மாணவி பாத்திமா லத்தீப்,  அவர் தங்கி இருந்த விடுதி அறை யில் தற்கொலை செய்து கொண் டார். அதற்கு காரணமான சில  பேராசிரியர்களை தனது செல் போன் நோட்ஸ் (குறிப்பில்) தெரி வித்திருந்தார் என்பதை செய்தி கள் மூலம் அறிய முடிகிறது. 

மேலும் அந்த மாணவியின் தந்  தையும் துரிதமான நடவடிக்கை எடுக்கக் கோரி தங்களிடம் மனு  கொடுத்துள்ளார். தமிழகம் முழு வதும் இந்திய மாணவர் சங்கம்  உள்ளிட்டு பல்வேறு அமைப்பி னர் நீதி கேட்டு போராடி வருவது  தாங்கள் அறிந்ததே. ஆகவே விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சென்னை ஐஐடியில் மட்டும்  கடந்த ஒரு வருடத்தில் 4 மாண வர்கள் ஒரு பேராசிரியர் உள்ளிட்ட  5 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை ஐஐடி நிர்வாகம் பின்பற்றுவதில்லை. இந்த நிர்வாகம் அரசியல் அமைப்புச் சட்டத்தை கூட முறை யாக கடைபிடிப்பதில்லை. பல்வேறு உளவியல் நெருக்கடி களை சிறுபான்மை மற்றும் தலித்  மாணவர்கள் சந்தித்து வருகி றார்கள். மேலும் சாதிய, மத பாலின  பாகுபாட்டை கடைபிடிக்கும் நிர்  வாகமாக சென்னை ஐஐடி இருப்  பதை அனுமதிக்க முடியாது.

எனவே இதுவரையிலான மரணங்கள் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுவதால் விரி வான விசாரணை தேவைப்படு கிறது. தமிழக மக்களுக்கு தெரி யப்படுத்தும் வகையில் வெளிப்  படைத் தன்மையிலான விசா ரணை குறித்தான விவரத்தை தாங்கள் தெரிவிக்க வேண்டுகி றோம். மேலும் கடந்த ஒரு வாரத்  தில் மட்டும் திருச்சியில் 4 மாண வர்கள் தற்கொலைக்கு முயன்று  இரண்டு மாணவர்கள் மரண மடைந்துள்ளனர். கல்வி வளா கங்களில் நிகழும் தொடர் மரணங்  களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாரியப்பன் , “காவல்  துறைத் தலைவர் அலுவல கத்தில் நாங்கள் அளித்த மனுவை  பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரி கணேசமூர்த்தி உரிய விசாரணை நடத்தப்படும் என் றும், நிச்சயமாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று  தெரிவித்ததாகக் கூறினார்.  சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் தலைமையில் துணைத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, வடசென்னை மாவட்டச் செயலாளர் இசக்கி ஆகியோர் மனு கொடுத்தனர்.