tamilnadu

img

‘‘அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாப்போம்’’ அம்பேத்கர் நினைவுநாள் சிறப்பு கருத்தரங்கில் உறுதியேற்பு

கோவை, டிச.6–  அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாப் போம் என்ற சிறப்பு கருத்தரங்கம் கோவையில் வெள்ளியன்று நடை பெற்றது.  அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கோவை மக்கள் மேடையின் சார்பில் சிறப்பு கருத்த ரங்கம் வெள்ளியன்று கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி திரு மண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மக்கள் மேடையின் ஒருங்கிணைப்பாள ரும், சிஐடியு மாவட்ட தலைவரு மான சி.பத்மநாபன் தலைமை தாங் கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.ஆறுச் சாமி வரவேற்புரையாற்றினார்.  ”அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாப்போம்” என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில்  புலவர் செந்தலை ந.கௌதமன் சிறப்புரை யாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் மக்கள் சிவில் உரிமைக்கழகம் (பியுசிஎல்) அமைப் பின் வழக்கறிஞர் ச.பாலமுருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞா னம், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி மலர வன் மற்றும் வழக்கறிஞர் ஜோதி குமார் உள்ளிட்டோர் உரையாற்றி னர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக் கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.  முன்னதாக, சோசலிச ஜனநாய கக் குடியரசை பாதுகாக்க உயிர் மூச்சு உள்ளவரை போராடுவேன். சமூக நீதியை நிலைநாட்ட துணை புரிவேன். வேற்றுமைகளை உரு வாக்கும் எந்த ஒரு அடையாளத் தையும் தாங்கி நிற்க மாட்டேன். அர சியலமைப்பு கூறும் அடிப்படை உரி மைகளை நிலைநாட்டவும்,  பேச்சு ரிமை மற்றும் எழுத்துரிமை காக்க வும் உறுதுணையாக இருப்பேன். அரசியலமைப்புச் சட்டம் வகுத் துள்ள தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர், பெண்கள் குழந்தைகள், மதச்சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் உரி மைக்காக போராடுவேன், தேசிய இன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என நிகழ்வில் பங்கேற்றோர் உறுதிமொழி ஏற்ற னர்.