சேலம், நவ.8- சேலம் கந்தம்பட்டியில் உள்ள ஒர்க் ஷாப்பில் வெள்ளியன்று ஏர் டேங்க் வெடித்ததில் சிறுவன் உட்பட 6 பேர் படு காயமடைந்தனர். சேலம், கந்தம்பட்டி மேம்பாலம் அருகில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பெயிண்டிங் ஒர்ப்ஷாப் செயல்பட்டு வரு கிறது. இங்கு புறவழிச் சாலையின் வழியாக செல்லும் லாரிகளுக்கு காற்று நிரப்பும் ஏர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயிண் டிங் ஒர்க் ஷாப்பில் கே.பி.கரட்டு பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் (30). மல்லூரை சேர்ந்த மூர்த்தி ஆகிய இருவரும் பணி யாற்றி வருகின்றனர். வெள்ளியன்று காலையில் அங்கு வந்த ஒரு லாரிக்கு ஊழியர் விஷ்ணுகுமார் காற்று நிரப்புவதற்கு ஏர் டேங்க்கிற்குரிய மோட்டாரை இயக்கி காற்று நிரப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ஏர் டேங்க் பயங்கர சத்தத் துடன் வெடித்து சிதறியது. இதில் விஷ்ணு குமார், மூர்த்தி, லாரி ஓட்டுநர் மற்றும் அங்கு அமர்ந்திருந்த ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த தன்ராஜ் ஆகியோர் தூக்கி வீசப் பட்டு காயமடைந்தனர். இந்த ஏர் டேங்கின் ஒருபகுதி வெடித்து சிதறி லாரி மீது பயங்கர மாக மோதியது. இதேபோல் மற்றொரு பகுதி சுமார் 100 அடி தூரத்தில் உள்ள ராமன் என்பவரின் வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு விழுந்தது. அப்போது, வீட்டினுள் இருந்த ராமனின் மகன் மவுளீஸ்வரன் (11), யேதீஸ்ரன் (6) ஆகியோர் மீது ஏர் டேங்கின் பாகமும் விழுந்து அமுக்கியது. இதில் மவுளீஸ்வரனுக்கு கை விரல் துண் டானது. கால் பகுதியில் பயங்கர வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது. இதேபோல் யேதீஸ் வரனுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவர்களை அக்கம் பக்கத்தினரின் உதவி யுடன் மீட்ட ராமன், சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தார். அங்கு சிறுவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இதேபோல், காயமடைந்த விஷ்ணு குமார், மூர்த்தி, தன்ராஜ், லாரி ஓட்டுநர் ஆகி யோருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சூரமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.