கோவை, ஜூலை 21– சாதி பெருமைக்காக சக மனி தனை வெட்டிக்கொல்கிற ஈர மற்ற தமிழ் சமூகத்தின் மனசாட்சி யோடு பரந்துபட்ட உரையாடலை துவக்குவோம் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட மாநாட்டை துவக்கி வைத்து தமுஎகச மாநில பொது செயலாளர் ஆதவன் தீட்சண்யா உரையாற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட 3 ஆவது மாநாடு சூலூர் பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது. உடு மலை துரையரசன் கலைக்குழு வின் எழுச்சி பாடல்கள் மற்றும் நிகர் கலைக்குழுவின் தப்பாட்டத் தோடு மாநாடு தொடங்கியது. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இரா.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பி.சுப்பிர மணியம் வரவேற்று பேசினார். மாநாட்டை துவக்கி வைத்து தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை தலைவருமான ஆதவன் தீட்சண்யா உரையாற்றினார். அவர் பேசுகையில், தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் பணிகள் தீர்மானகரமாக இருக்க வேண்டும். மலக்குழி மரணங் களை தடுப்பதற்கும், சாதிய ஆண வப் படுகொலைக்கெதிரான உறு திமிக்க போராட்டத்தை முன்னெ டுக்க வேண்டும். சாதி, மத வன் முறையாளர்களோடு ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. நம்மு டைய பணிகள் முழுமையும் ஒடுக் கப்பட்டவர்கள் பக்கத்தின் நியா யத்தை மீட்டெடுப்பதாக இருக்க வேண்டும்.
தமிழ்ச்சமூகத்தின் மனசாட்சி சாதியத்தால் இறுகிக்கிடக்கிறது. சக மனிதனை வெட்டிக் கொல்லக் கூடியதாக, தான் பெற்ற மகனை, மகளை சாதி பெருமையை காப் பாற்றிக் கொள்ள வெட்டிப் படு கொலை செய்கிற அளவிற்கு ஈர மற்று கிடக்கிறது. இதையெல் லாம் நீ ஏன் சாதியின் பெயரால் குற்றங்களை நிகழ்த்தக்கூடிய வனாய் இருக்கிறாய் என்கிற உரையாடலை நிகழ்த்த வேண் டும். நாட்டின், சமூகத்தின், குடும் பத்தின் வளர்ச்சிக்கு உன்னுடைய ஆற்றல் தேவைப்படுகிறது என் கிற கேள்வியை இளைஞர்கள் மத்தியில் முன்வைத்து உரையாட உள்ளோம். சாதியப் பாகுபாட்டால் சக மனிதனை வெட்டுவதும், துன் புறுத்தி சீரழிக்கும் குற்ற மனநிலை யில் இருந்து விடுபடுங்கள் என தமிழ் சமூகத்திடம் தோழமை யோடு மன்றாட உள்ளோம். பரந்து பட்ட சமூகத்தோடு உரையாடு வதற்கான ஆற்றலை, உறுதியை பெற மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய தலித்திய அமைப்பு களை சார்ந்த அனைவரும் ஒன்றி ணைவோம் என உரையாற்றி னார். இதனைத்தொடர்ந்து தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கையை மாவட்ட செயலா ளர் யு.கே.சிவஞானம் முன்வைத் தார். பொருளாளர் எம்.கஜேந்தி ரன் வரவு செலவு அறிக்கையை முன்வைத்தார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜலட் சுமி, திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஆதித்தமி ழர் பேரவையின் விடுதலை செல்வன், தமிழ்நாடு ஒடுக்கப்பட் டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி, இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஸ்டாலின் குமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற் றினர். முன்னதாக ஒழிய வேண் டிய சாதி உருவானது எப்படி என்கிற தலைப்பில் சூலூர் பாவேந் தர் பாசறையின் செந்தலை ந.கௌத மன் கருத்துரையாற்றினார்.
மாநாட்டில் தலைவராக யு.கே.சிவ ஞானம், பொதுச்செயலாளராக இரா.ஆறுச்சாமி, பொருளாளராக எம்.கஜேந்திரன் உள்ளிட்ட 9 நிர் வாகிகளும் 35 பேர் கொண்ட மாவட் டக்குழுவும் மாநாட்டில் தேர்ந்தெ டுக்கபட்டன. மாநாட்டை நிறைவு செய்து தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநிலக்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை உரையாற்றி னார். முன்னதாக மாநாட்டில் எழுத் தாளர்கள் ஒடியன்லட்சுமணன், ஏகலைவன், அ.கரீம், பொறியா ளர் செந்தில், சமூக செயற்பாட் டாளர் ஆன்மன், குறும்பட இயக் குநர் அ.டென்னீஸ் மற்றும் ஆண வப்படுகொலைக்கெதிரான நடை பயணம் மேற்கொண்ட எஸ்.ஜோதிபாசு ஆகியோர் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர்.
தீர்மானங்கள்
ஸ்மார்ட்சிட்டி என்கிற பெய ரில் வெளியேற்றப்பட்டுள்ள ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மக்களை மாநகர பகுதிகளில் மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரத்தின் மையத்தில் அரசு ஏற்பாட்டில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட வேண்டும். மனுவின் அடிப்படை யில் மீண்டும் குருகுல கல்வியை புகுத்தி, ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி கிடைக்கக்கூ டாது என்கிற சதியை உருவாக்கும் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். அரசாணை 92 ஐ அமலாக்காத கல்வி நிறுவ னங்களின் மீது பாரபட்சமின்றி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்டு உரிய பயனா ளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். வன்கொடுமை வழக்குகளுக்கு விரைவில் நீதி கிடைக்க சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். மக்கள் தொகைக் கேற்ப அருந்ததிய மக்களுக்கு உள் இடஒதுக்கீட்டை அதிக ரித்து முழுமையாக அமலாக்கப் படுகிறதா என்பதை அரசு நிர்வா கம் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட் டில் நிறைவேற்றப்பட்டது. முடி வில் ஆர்.பிரபாகரன் நன்றி கூறி னார்.