tamilnadu

img

சரவணம்பட்டி பகுதியில் புதிய 100 கண்காணிப்பு கேமராக்கள்

கோவை, செப்.30- கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சரவணம்பட்டி காவல் எல்லையில் புதியதாக 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்கவிழா திங்களன்று நடைபெற்றது. கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் மற்றும் சமூக விரோத குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளி களை விரைவாக கைது செய்யவும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாநகர எல்லைக் குட்பட்ட பகுதியில் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் அவர்களின் உத்தரவின் பேரில் பல்வேறு பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகி றது. இதில், ஆர்எஸ்புரம் துவங்கி, பீளமேடு காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, காட்டூர் காவல் எல்லை, போத்தனூர் காவல் எல்லை, சிங்கா நல்லூர் காவல் எல்லை என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வரும் சரவணம்பட்டி காவல் எல்லையில் 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேம ராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழா மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் சரவணம் பட்டி காவல் நிலைய பகுதியில் துவங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, அவர் இந்த கண்காணிப்பு கேமரா வழங்கிய தனியார் நிறுவனத்தின் உரிமை யாளர்கள், சமூக சேவகர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த கண்காணிப்பு கேமராக்கள், சரவணம்பட்டி காவல் எல்லையின் முக்கிய பகுதிகளான பெருமாள் கோவில் வீதி, ஸ்ரீராம் நகர், ராதா லேடீஸ் ஹாஸ்டல் பகுதி, சிவன் கோயில் பகுதி, கோவை சத்தி சாலை, உட்பட பல் வேறு பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா அமைக்கும் நிகழ்ச் சியில் காவல் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், செல்வக்குமார், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.