districts

கடலூர் மாவட்டத்தில் 1,509 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா

கடலூர், ஏப்.5- கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற  தொகுதிகளிலும் பொதுமக்கள் அமைதியான  முறையில் வாக்களிக்க ஏதுவாக 3001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  அந்த வாக்குச்சாவடிகளில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி எவை என்று ஏற்கனவே கண்டறியப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 சட்ட மன்ற தொகுதிகளிலும் 28 மிகவும் பதற்றமான  வாக்குச்சாவடிகள் என்றும், 183 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறி யப்பட்டது. இந்த இடங்களில் துணை ராணு வத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இது தவிர ஆயுதப்படை போலீசாரும், சில இடங்களில் உள்ளூர் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.