tamilnadu

img

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

பெய்ஜிங் 
சீனாவில் அதிக சேதாரத்தை ஏற்படுத்திய கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது ஓரளவு கட்டுக்குள் உள்ள நிலையில், சிச்சுவான் மாகாணத்தின் ஷிகூ நகரில் புதனன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாகப் பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்குள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கடுமையாக புரட்டியெடுத்தது. சுமார் 700 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் 4,000-க்கும் அதிகமானோர் இயல்பு நிலையை இழந்துள்ளனர். எனினும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்  உயிர் மற்றும் பொருட்சேதம் பற்றிய விரிவான தகவல் ஏதும் இல்லை என்றாலும், 79.83 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.86 கோடியே 5 லட்சத்து 51 ஆயிரம்) பொருளாதாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.